பிரான்ஸ் குடியுரிமை பெற்ற சிறுமியும் தாயும் இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என விமானநிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் கைது செய்யப்பட்ட மகளும் தாயும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாவும் தெரியவந்துள்ளது.
மேலும் இது குறித்து தெரியவருவதாவது,
பிரான்ஸ் நாட்டிலிருந்து அண்மையில் விடுமுறையில் இலங்கை வந்திருந்த சிறுமியும் தாயும் இன்று திங்கட்கிழமை பிற்பகல் பிரான்ஸ் நாட்டுக்கு திரும்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையம் சென்றிருந்தனர்.
அவர்கள் இருவரும் விமானநிலையத்தில் வழமையான சோதனை நடவடிக்கைகள் யாவற்றையும் முடித்துக்கொண்டு குறித்த நேரத்திற்கு பிரான்ஸ் நாட்டிற்கு புறப்படத் தயாராகவிருந்த விமானத்தில் ஏறியிருந்த வேளையிலேயே விமானநிலைய அதிகாரிகளால் குறித்த தாயும் மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான சிறுமியான பகல்வி முருகேசு (8 வயது) பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்றவராவார்.
இதேவேளை, இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கையின் சார்பில் கலந்து கொண்டு உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர், இலங்கையில் மனித உரிமைகள் முன்னேற்றம் அடைந்திருப்பதாக தெரிவித்திருந்த வேளையில் இலங்கை கட்டுநாயக்க விமானநிலையத்தில் இவ்வாறு தாயும் மகளும் கைதாகியுள்ளனர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது

No comments:
Post a Comment