March 18, 2015

மோடியுடன் கைகுலுக்கிய மாணவன் சிறையில். (வீடியோ, படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கைகுலுக்கிய
பல்கலைக்கழக மாணவன் ஒருவர் இந்தியப் பாதுகாப்பு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு, சிறிலங்கா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். கடந்த சனிக்கிழமை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய உதவியுடன் கட்டப்பட்ட வீடுகளை கையளிக்க கீரிமலைக்குச் சென்றிருந்தார்.

வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வுக்குப் பின்னர், இளைஞர் ஒருவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கைகுலுக்கியிருந்தார். நரேந்திர மோடி அங்கிருந்து சென்ற பின்னர், இந்தியப் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த இளைஞரைக் கைது செய்து, சிறிலங்கா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இளைஞர் ரஜரட்ட பல்கலைக்கழக மூன்றாம் ஆண்டு மாணவன் என்றும், தேசிய இளைஞர் சேவைகள் குழுவின் செனட் உறுப்பினர் என்றும் தெரியவந்துள்ளது.

சிறிலங்கா காவல்துறையினரால் மல்லாகம் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட அந்த இளைஞரை வரும் 23ம் நாள் மீண்டும் முன்னிலையாகுமாறு கூறி, நீதிவான், லெனின்குமார் பிணையில் விடுவித்துள்ளார்.

No comments:

Post a Comment