Soft -Save One cent for Tamileelam” என்ற அமைப்பின் மூலம்
‘தமிழீழத்திற்காக ஒரு சதம் தினமும் சேமிப்போம்’ திட்டத்தை தன்னிச்சையாக
எந்த அமைப்புகளின் பின்புலமும் இல்லாமல்
ஆரம்பித்து நம்பிக்கையின் சிகரங்களாக உயர்ந்து
நிற்கும் யேர்மன் வாழ் ஈழத்தமிழ் இளையோரின் முயற்சியை வாழ்த்தி வரவேற்பதுடன் உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் இளையோர் இவர்களுடன் இணைந்து வலுச்சேர்க்குமாறு ஈழதேசம் இணையம் உரிமையோடு கேட்டுக்கொள்கின்றது.
தமிழீழத் தாய்மண்ணை விட்டு புலம்பெயர்க்கப்பட்ட நாம் உலகெங்கும் பரவிவாழ்ந்து வருகின்றோம். இரண்டு மூன்று தசாப்தங்களாக முடிவின்றித் தொடரும் புலம்பெயர் வாழ்வின் அடையாளமாக தாய் மண்ணின் நேரடிப்பரிச்சயம் இல்லாமல் இரண்டு மூன்று தலைமுறைகள் உருவாகியுள்ளது.
முற்றிலும் மேற்கத்தைய கலாச்சார சூழலில் தமது வாழ்வின் ஒவ்வொரு நொடிப்பொழுதினையும் நகர்த்தியே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட போதிலும் தமது உடலில் ஓடும் ஒவ்வொரு இரத்த அணுக்களிலும் தாய்மண் பற்று படிந்துபோயுள்ளது என்பதை இந்த புலம்பெயர்வாழ் ஈழத்தமிழ் இளையோர் நிரூபித்து வருகின்றனர்.
சர்வதேசம் ஒன்றுசேர்ந்து எமது விடுதலைப்போராட்டத்தை முற்றிலுமாக அழித்து நிர்மூலமாக்குவதற்கு கங்கணம்கட்டி நின்ற நிலையில் அந்த நச்சு சக்கரத்தில் இருந்து எமது மண்ணையும் மக்களையும் காப்பாற்றுவதுடன் அதன் பாதுகாப்பரணாக திகழும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினையும் பாதுகாக்கும் நோக்குடன் முள்ளிவாய்க்காலில் எமது மக்களின் பாதுகாப்பிற்காக ஏந்தப்பட்ட ஆயுதங்களை மௌனிப்பதற்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தீர்க்கமான முடிவினை எடுத்திருந்தார்.
இந்த ஆயுத மௌனிப்பானது களத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த விடுதலைப் போராட்டத்தை புலம்பெயர் வெளிக்கு நகர்த்தியதுடன் அதனை முன்னெடுக்கும் பொறுப்பினை புலம்பெயர்வாழ் ஈழத்தமிழ் இளையோரிடம் கையளிக்கும் பொறுப்பு கைமாற்றத்தையே நோக்கமாக கொண்டிருந்தது.
அதனை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக புலம்பெயர் வாழ் ஈழத்தமிழ் இளையோர் செவ்வனே செய்துவருகின்றனர். தாயகத்தில் சிங்களப்படைகளால் கொன்றொழிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி கேட்கும் போராட்டத்தை சர்வதேச அரங்கில் இடைவிடாது முன்னெடுத்துவருகின்றனர்.
யேர்மன்வாழ் ஈழத்தமிழ் இளையோர் ஆரம்பித்துள்ள “Soft -Save One cent for Tamileelam” என்ற அமைப்பின் மூலம் தாயகத்தில் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இனஅழிப்பு போரில் தாய் தந்தையரை இழந்து அநாதரவாக்கப்பட்ட சிறுவர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் முயற்சியை பாராட்டுவதுடன் அவர்களது இலட்சியத்தை அடைய நாமெல்லோரும் துணைநிற்பது அவசியமாகும்.
“Soft -Save One cent for Tamileelam” அமைப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘தமிழீழத்திற்காக ஒரு சதம் தினமும் சேமிப்போம்’ என்ற திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு உண்டியலை கொடுத்து நிதிதிரட்டிவருகின்றார்கள் இந்த இளையவர்கள்.
இந்த திட்டம் கடந்த ஆண்டு யூன் மாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 69 உண்டியல்களை கொடுத்து நிதிதிரட்டும் முயற்சியை ஆரம்பித்துள்ளார்கள். சுமார் எட்டு மாதங்களின் பின்னர் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 69 உண்டியல்களிலும் ஆயிரத்து ஐநூறு யூரோவிற்கு அதிகமான பணம் சேர்க்கப்பட்டுள்ளது.
அமைப்புகளின் பின்புலம் இன்றி இளையோர் தன்னிச்சையாக முன்னெடுத்துள்ள இத்திட்டத்தில் சேர்ந்த பணத்தைவிட அவர்களது முயற்சியும் எண்ணங்களும் சிகரம் தொட்டு நிற்கின்றன. இதனை வெற்றிகரமாக்குவது புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்துவரும் ஒவ்வொரு ஈழத்தமிழர்களின் கடமையாகும்.
தினமும் ஒரு சதம் என்பதைவிட நாங்கள் மொத்தமாக குறிப்பிட்ட ஒரு தொகையை தந்துவிடுகின்றோமே என பலர் கேட்டதாக கூறிய இத்திட்டத்தின் நாயகர்களில் ஒரு இளைஞர் தமது நோக்கத்தை இவ்வாறு விவரித்தார்.
இந்த உண்டியலை ஒவ்வொரு வீட்டிலும் வைத்து தினமும் எமது தமிழீழ தேசத்திற்காக ஒரு சதத்தை இடும்போது தாயகப்பற்று தினமும் துளிர்ப்புப் பெறும். அந்த வீட்டில் உள்ள சிறுவர்ளுக்கும் இதன் மூலம் எமது தேசத்தின் மீதான பற்றுதல் வலுப்படும். இதற்காகவே இத்திட்டத்தை நாம் இவ்வாறு ஆரம்பித்துள்ளோம் எனக் கூறியுள்ளார்.
நிதி சேகரிப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல் எமது விடுதலைப் போராட்டம் குறித்த செய்திகளை இளையவர்களிடமும் யேர்மன் மக்களிடமும் கொண்டுசெல்வதற்கும் திட்டமிட்டுள்ளார்கள். இதற்காக கலை நிழ்வுகளை நடத்தி அதில் திறமைவாய்ந்த கலைஞர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்க முடிவுசெய்துள்ளார்கள்.
இதனை யேர்மனியில் மட்டுமல்லாமல் ஈழத்தமிழர்கள் வாழும் நாடுகளிற்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ள இவர்களின் முயற்சியில் குறிப்பாக புலம்பெயர்வாழ் ஈழத்தமிழ் இளையவர்கள் தம்மை முழுமையாக இணைத்துக் கொண்டு வலுப்படுத்துமாறு ஈழதேசம் இணையம் அன்போடும் உரிமையோடும் கேட்டுக் கொள்கின்றது.

No comments:
Post a Comment