சுவிட்சர்லாந்தில் உள்ள கிரிமியா மற்றும் செவஸ்டோபோல் பகுதிகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய அதிரடியாக தடை விதித்துள்ளது.
இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள சுவிஸின் மத்திய கவுன்சில்
அலுவலகம், கிரிமியா(Crimea) மற்றும் செவஸ்டோபோல்(Sevastopol) பகுதிகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ரஷ்ய நாட்டிற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள சர்வதேச பொருளாதார தடைகள் தொடர்பான சூழ்ச்சிகளை தடுக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய கவுன்சில் தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் கிரிமியா பகுதியை ரஷ்யாவோடு இணைத்துக் கொள்வது தொடர்பாக அறிமுகப்படுத்திய அங்கீகாரம் இல்லாத நடவடிக்கைகளை நீடிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார தடைகளில் உள்ள சூழ்ச்சிகளால் சுவிஸ் பகுதிகள் தவறாக பயன்படுத்தப்படக்கூடாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கிரிமியா மற்றும் செவஸ்டோபோல் பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள தடைகள் அங்குள்ள சுற்றுலா மற்றும் ஏனைய பொருளாதார துறைகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து கிரிமியா மற்றும் செவஸ்டோபோல் பகுதிகளுக்கு இறக்குமதி செய்யப்படும் முக்கிய பொருட்களுக்கும் இந்த தடையில் உள்ள அம்சங்கள் பொருந்தும் என சுவிஸ் பொருளாதார விவகாரத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment