சிறிலங்காவின் முன்னாள் கடற்படை பேச்சாளர் டீ.கே.பி. தஸநாயக்க குற்றப் புலனாய்வு பிரிவினரால் விசாரணைகு உட்படுத்தப்பட்டுள்ளார் என காவற்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
2008-2009ம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பிலும், திருகோணமலையிலும் 11 தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் காணாமல் போன சம்பவம் இடம்பெற்றிருந்தது.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் முழுமையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென காவற்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த காலப்பகுதியில் கடற்படைத் தலைவராக செயற்பட்ட வயிஸ் அட்மிரல் வசந்த கரன்னகொடவின் உத்தரவின் பேரில், கடற்படையினரால் விசேட புலனாய்வு பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது.
இந்த புலனாய்வு பிரிவே குறித்த காணாமல் போதல் சம்பவங்களுக்கு காரணமாக அமைந்ததாகவும் கூறப்படுகிறது.இதன் அடிப்படையில் முன்னாள் கடற்படை பேச்சாளரிடம், சுமார் 5 மணித்தியாலங்கள் வரையில் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment