March 1, 2015

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 5ம் வருட தேசிய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிகளின் வருடாந்த மாநாடு இன்று காலை 10.30 மணிக்கு கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது.

மேற்படி நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரசார செயலாளரும், காரைநகர், வேரப்பிட்டி சரஸ்வதி வித்தியாலயத்தின் அதிபருமான திரு சிவகுரு இளங்கோ அவர்களது தலைமையில் இடம்பெற்றது.
ஆரம்ப நிகழ்வாக கட்சிகளின் கொடிகள் ஏற்றப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொடியினை கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் கொடியினை கட்சியின் தலைவர் இ.எ.ஆனந்தராஜா அவர்களும் ஏற்றி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து தமிழ் மக்களது உரிமைப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்காக ஈகச் சுடரேற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. ஈகச் சுடரினை மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி புவனேசசிங்கம் சரஸ்வதி அவர்கள் ஏற்றிவைத்தார்.
அடுத்த நிகழ்வாக தமிழ்த் தாய் வாழ்த்து இடம்பெற்றது. தமிழ்த் தாய்வாழ்த்தினை யாழ் வடமராட்சி மத்திய மகளீர் கல்லூரி மாணவிகளான செல்வி பாஸ்கரன் றித்திகா மற்றும் இரத்தினேஸ்வரன் யஸ்மியா ஆகியோர் பாடினர்.





சிறப்புரை ஆற்றியவர்கள்:
1. கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும்
2. தர்மலிங்கம் சுரேஸ்: மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர்
3. இ.எ.ஆனந்தராஜா, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உபதலைவரும்
4. வவுனியா மாவட்டம் சார்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உபதலைவர் சிவபாதம் கஜேந்திரகுமார்:
5. திருமதி விவேகானந்தன் இந்திராணி முல்லைத்தீவு மாவட்டம் சார்பாக

6. இராஜகோன் ஹரிகரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர்.
7. விஸ்வலிங்கம் திருக்குமரன் சட்டத்தரணி
நன்றியுரை
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன்
மேற்படி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து நடாத்திய வருடாந்த மாநாட்டில் வெளியிடப்பட்ட தீர்மானங்கள்.

1. சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட இரு தேசம் ஒரு நாடு என்ற எமது கொள்கையை அடைய எமது கட்சியை கிராமம் தோறும் கட்டமைப்புக்களை நிறுவி புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகளையும் தமிழக உறவுகளையும் ஒன்றிணைத்து போராடுவோம்.
2. தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட, கட்டவிழ்த்து விடப்பட்டுக்கொண்டிருக்கின்ற பாரிய இன அழிப்புக்கு எதிராக சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்தக்கோரி எமது செயற்பாடுகளை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பாரியளவில் முன்னெடுப்போம்
3. காணமால் போனவர்கள், அரசியல் கைதிகள் என்பவர்களின் விடுதலையை வலியுறுத்தியும், நில அபகரிப்புக்கு எதிராகவும் பன்முகப்படுத்தப்பட்ட போரட்டங்களை முன்னெடுப்போம்.
4. வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் தமிழ்த்தேசிய பேரவையை நிறுவி தமிழ் மக்களை நிர்வாகிக்கும் ஒரு நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவோம்.
5. போரினால் பாதிக்கப்பட்ட அவயங்களை இழந்த எமது மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப புலம்பெயர்ந்த மக்களின் உதவியுடன் செயற்திட்டங்களை முன்னெடுப்போம்.
6. புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் பேராதரவுடன் வடக்கு கிழக்கில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்கு எமக்கான பொருளாதார கொள்கையை வகுத்து செயற்படுவோம்.
7. எமது தேசததிற்கான கல்விக்கொள்கை, விளையாட்டுக்கொள்கை, கலைபண்பாட்டுக்கொள்கை சுகாதரக்கொள்கை என்பவற்றை உருவாக்கி முன்னெடுப்போம்.
நன்றி
தமிழ் தேசிய மக்கள் முன்னணி
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
28-02-2015

No comments:

Post a Comment