February 27, 2015

மீள்குடியமர்வு மிகவும் அவசியம் எஸ்.சஜீவன் வேண்டுகோள் !

வலி.வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலைத்திற்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பொது மக்களுடைய காணிகள் முழுமையான விடுவிப்பதற்காக அழுத்தத்தினை அமெரிக்க அரசாங்கம் கொடுக்க வேண்டும்.


வலி.வடக்கு வாசிகள் தொடர்ந்தும் ஏமாற்றப்படுவது ஆனுமதிக்க முடியாததொன்று என்றும் யாழ்.வருகைதந்த அமெரிக்க அரசியல் விவசாரக் குழுவிடம் வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவர் எஸ்.சஜீவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்
.
இன்று காலை யாழ்ப்பாணத்திற்கான திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்ட அமெரிக்காவின் அரசியல் விவகார குழுவினர் பிரத்தியோக இடம் ஒன்றில் வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழுத் தலைவர் எஸ்.சஜீவனைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

மேற்படிச் சந்திப்புத் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் கையகப்படுத்தி வைக்கப்பட்டுள்ள மக்களுடைய சொந்தக் காணிகளுடைய வரைபடங்கள் அதிகாரிகளுக்கு காண்பிக்கப்பட்டதுடன், அப்பகுதிகளில் குடியேற வேண்டிய மக்களுடைய சனத்தொகை தொர்பான புள்ளிவிபரங்களும் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

குறித்த பகுதியில் குடியேற வேண்டிய மக்கள் 25 வருடத்திற்கு முன்பாக வழங்கப்பட்ட தகரங்களைப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட குடிசைகளுக்குள்ளேயே இன்றுவரை வாழ்ந்து வருகின்றார்கள். கடந்த 25 வருடமாக அகதி முகாங்களில் வாழும் அவர்களுக்குத் தேவையான மலசல கூடம், குடிநீர் வசதி, வாழ்வாதாரம் மற்றும் சுநாதார வசதிகள் போன்ற அடிப்படைத் தேவைகள் கூட இதுவரையில் பூர்த்தி செய்யப்படவில்லை. குறிப்பாக ஒரு மலசல கூடத்தினை 10 தொடக்கம் 15 குடும்பங்கள் பயன்படுத்தி வருகின்றார்கள்.
இருப்பினும் அவர்களுடைய அகதி முகாங்களின் வாழ்கைக்குத் தேiவாயனவற்றினைப் பெற்றுக் கொள்வதில் உள்ள எதிர்பார்ப்பினையும் பார்க்க தாம் தமது சொந்த நிலத்திற்கு செல்ல வேண்டும் என்பதிலேயே அவர்கள் உறுதியாக உள்ளனர்.
எனவே புதிய அரசாங்கத்தின் 100 நாள் செயற்றிட்டத்தில் வலி.வடக்கு மக்களை முழுமையான குடியமர்த்துவதற்கான அழுத்தத்தினை அமெரிக்க இலங்கை அரசாங்கத்திற்கு கொடுக்க வேண்டும்.

இதுமட்டுமல்லாமல் வல்லை – அராலி வீதியில் அச்சுவேலி ஒட்டகப்புலத்தில் இருந்து தெல்லிப்பளை வரையில் சுமார் 5 கிலோ மீற்றரும் 100 மீற்றர் தூரமான வீதி இராணுவ முகாம் பாதுகாப்பிற்காக மூடி வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரே ஒரு புற்று நோய் வைத்திய சாலை தெல்லிப்பளையில் அமைந்துள்ளது. வடமராட்சியில் இருந்து குறித்த வைத்திய சாலைக்கு வருகைதருபவர்கள் இராணுவம் வீதியினை மூடி வைத்துள்ள காரணத்தினால் சுமார் 30 கிலோமீற்றர் தூரம் சுற்றி வர வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வீதியினை விடுவித்து பொது மக்களுடைய பயன்பாட்டிற்கு கையளிக்கப்பட வேண்டியதன் அவசியமும் உள்ளது என்றும் வருகைதந்த அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment