February 15, 2015

வலிகாமம் மக்களது குடிநீருக்காக வெள்ளவத்தையில் ஆர்ப்பாட்டம்!


யாழ் வலிகாமம் மக்களது குடிநீருக்காக இன்று காலை வெள்ளவத்தையில் சமுக நலனுக்காக ஒருங்கிணைந்த இளைஞர்கள் அமைப்பு மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தது
.
இவ்வார்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் சட்டத்தரணிகள், புத்திஜீவிகள், கொழும்பில் உள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது முன்வைத்த யோசனைகள் பின்வருமாறு,
யாழ் குடாநாட்டின் வலிகாமம் பகுதி நிலத்தடி நீரில் என்ணெய் கழிவுகளின் கலப்பினால் பாதிக்கப்படட கிணறுகளின் எண்ணிக்கை பாதிப்பின் அளவு பாதிப்பின் தன்மை போன்றவை தொடர்பான தகவல்களைப் பொதுமக்கள் பார்வைக்கு வெளிப்படுத்தல் வேண்டும். 
இது தொடர்பாக இதுவரை செய்யப்பட்டுள்ள ஆய்வுகளின் முடிவுகளை சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் உடனடியாகப் பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வருதல் வேண்டும்.
பாதிப்பின் மூலகாரணத்தைக் கண்டுபிடித்து மக்களுக்கு தெரியப்படுத்தல் வேண்டும்.
நீர் மாசடைவுக்குக் காரணமானவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி தாமதிக்காமல் மக்களுக்கு நீதியை வழங்க வேண்டும்.
நீர்த்தாங்கிகளில் குடிநீர் விநியோகிப்பது சரியான உடனடித் தீர்வல்ல. மாறாக கிணற்றை நம்பி வாழும் மக்கள் அன்றாடத் தேவைகளுக்கும் விவசாயத்துக்கும் அதே கிணற்று நீரைப் பயன்படுத்தும் வண்னம் சுத்திகரிப்புக் கருவிகளை அரசு மக்களுக்கு வழங்க வேண்டும்.
கருவிகளை இயக்குவதற்கான எரிபொருளையும் மின்சாரத்தையும் மாணியமாக வழங்க வேண்டும. இவற்றுக்கான செலவினை நீரை மாசுபடுத்தியவர்களிடம் இருந்து அறவிட வேண்டும்.
நீர் மாசினால் ஏற்படக்கூடிய தீங்குகள் தொடர்பில் மக்களுக்கு போதிய தகவல்களை வழங்கி தொடர்ந்தும் அறிவூட்டல் வேண்டும்.
உள்நாட்டு வெளிநாட்டு நிபுணர்களின் உதவியினை உடனடியாக பெற்ற மாசடைந்த நீரை நீண்டகாலப் பயண்பாட்டுக்குத் தூய்மைப்படுத்துவதற்கான செயற்பாடுகளை உடனடியாகத் தொடங்க வேண்டும்.
பிராந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் நீர்மாசமைவு தொடர்பான ஆய்வுகளுக்கும் தீர்வுகளுக்கும் தங்களாலான பங்களிப்புக்களைச் செய்ய உடனடியாக முன்வர வேண்டும்.
மத்திய அரசாங்கமும். வடக்கு மாகாண சபையும் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் எதுவித தொய்வுமின்றி தொடாந்தும் முன்னெடுக்கப்படல் வேண்டும்.
யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதி மக்களும் சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொள்ளும் அடிப்படை உரிமையை மத்திய அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.
போன்ற கோரிக்கைகள் அடங்கிய மகஜரில் கையெழுத்திட்டு ஜனாதிபதி, பிரதமர் நீர்விநியோக அமைச்சர், வடக்கு மாகணசபை முதலமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக  ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment