January 3, 2015

தமிழர்களிடம் எஞ்சியிருக்கும் கோமணத்தையாவது உருவாமல் இருக்க ஆட்சிமாற்றம் தேயாம்-அரியநேத்திரன்!

எதிர்வரும் 23, 24ம் திகதி தபால்மூலமாக வாக்களிக்க வேண்டிய அரச அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், அதிபர், ஆசிரியர்கள் உட்பட
தமிழ் பிரமுகர்கள் அனைவரும் ஆட்சி மாற்றம் ஒன்றுக்காக வாக்களிக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்தார்.
அம்பிளாந்துறையில் அவரது காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். ஆயுதப்போர் கடந்த 2009 மௌனிக்கப்பட்டு ஐந்தரை வருடம் கடந்த நிலையிலும் நிம்மதியாக நடமாடமுடியாமலும் இறந்த உறவுகளுக்காக, ஒரு தீபம் கூடஏற்ற முடியாமலும் இராணுவ அடக்குமுறைக்குள்ளும் புலனாய்வாளர்களின் கண்காணிப்பிலும் காலத்தை ஓட்டுகின்றோம்.
இன்னும் சிறைகளில் சுமார் 500 தமிழ் அரசியல்கைதிகள் உள்ளனர். சரண் அடைந்த முன்னாள் போராளிகள் மீண்டும் கைது செய்யப்படுகின்றனர்.
எம்மை பொறுத்தவரை ஆட்சிமாற்றத்தால் அரசியல் தீர்வு வராது என்பது உண்மை. ஆனாலும் அராஜகத்திற்கு மாற்று நடவடிக்கையாக இந்த ஆட்சிமாற்றத்தை சாதகமாக பரிசீலிக்க முடியும்.
‘மைத்திரி பட்டு வேட்டி தருவார் என்று நாம் கூறவில்லை. எஞ்சி இருக்கும் கொமணத்தையாவது உருவாமல் பாதுகாக்க மாற்றம் ஒன்றுக்காக நாமும் வாக்களிப்பதுதான்’ சிறந்த புத்திசாரூதியமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment