January 4, 2015

அமைச்சா் டக்கி கட்சிதாவத் தயாராகிறார் - அங்கஜனுடன் சண்டைதானாம் காரணம் - விஜயகலா ஆவேசம்!!

யாழ்ப்பாணத்தில் நாட்டாமை வேலை செய்து வரும் அமைச்சா் டக்கிளஸ்தேவானந்தா பொதுக்கட்சியுடன் சேருவதற்குத் தீா்மானித்துள்ளதாகத் தெரியவருகின்றது. எதிர்வரும்
ஜனாதிபதித் தோ்தல் முடிவடைந்தவுடன்
மகிந்த தோற்றால் உடனடியாகக் கட்சி மாறவுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடா்பாக அமைச்சர் சந்திரிக்காவுடன் இரகசியமாகத் தொடா்பு கொண்டுள்ளாராம்.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தொடங்கி எல்லாக் கட்சிகளும் பொதுக்கூட்டணியுடன் சோ்ந்துள்ள நிலையில் அமைச்சரும் சோ்ந்தால் நிலை என்னவாகும் என அரசியல் அவதானிகள் சிந்தனைவசப்பட்டுள்ளனா். அமைச்சா் பொதுக்கூட்டமைப்பில் இணைந்தால் தான் கொலைகாரியாக மாறவேண்டிவரும் என விஜயகலா மகேஸ்வரன் ரணிலுக்கு தொலைபேசியில் தெரிவித்துள்ளாராம். தனது கணவனைக் கொன்றவா்களுக்கு சரியான தண்டனை வழங்கவேண்டிய நேரத்தில் டக்ளஸ் இவ்வாறு கட்சி மாற முற்பட்டு தன்னைக் காப்பாற்ற முயல்வதாக விஜயகலா குற்றஞ்சாட்டியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதே வேளை ஜனாதிபதி கடந்த 2ம் திகதி யாழ்ப்பாணம் வந்த போது அமைச்சரின் அடியாள்களுக்கும் அங்கஜனின் அடியாள்களுக்கும் இடையே கடும் சண்டை இடம்பெற்று அமைச்சரின் அடியாட்களால் அங்கஜனின் தொண்டா்களால் நையப்புடைக்கப்பட்டுள்ளனா். இது தொடா்பாக அமைச்சா் ஜனாதிபதிக்கு எடுத்துக்கூறியும் ஜனாதிபதி அதைப் பொருட்படுத்தாது சென்றதால் அமைச்சா் கொதிப்படைந்தே சந்திரிக்காவுடன் தொடா்பு கொண்டார் எனவும் உள்வீ்ட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment