December 26, 2014

“கற்றவர் சிலரின் பாமரச் செயல்களால் முழுப் பல்கலைக்கழக சமூகத்துக்குமே அவமானம்” பல்கலைக்கழக ஊழியர் சங்கம்!

யாழ்ப்பாணம் பல் கலைக்கழக ஊழியர் சங்கம் யாழ்ப்பாணம் பல் கலைக்கழகத்தின் துனை வேந்தரின் ஜனாதிபதித் தேர்தல் பரப்புரைக்கு
எதிராக போர்க்கொடி தூக்கி ஊடகங்களுக்கு செய்’திக்குறிப்பினை வெளியிட்டுள்ளார்கள்.செய்தி குறிப்பில் குறிப்பி;டப்பட்டுள்ள விபரம் வருமாறு.

1. தேர்தல் காலக்கெடுஅறிவிக்கப்பட்டநிலையில் -தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் வெற்றிக்குநல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும் அவ்வாழ்த்துக்களைபத்திரிகைகளில் விளம்பரப்படுத்துவதில் ஆட்சேபணை இல்லையெனவும் சகலபல்கலைக்கழகபணியாளர்களிடமிருந்தும் கையொப்பத்தைப்பெற்றுவழங்குமாறு 23.12.2014 அன்றுசகலபீடாதிபதிகளுக்கும் துணைவேந்தர் எழுத்துமூலம் அறிவித்துள்ளார்

இதுஅப்பட்டமானதேர்தல் காலவிதிமுறைமீறலுக்குசிறந்தஉதாரணமாகும். இவ்வாறானகோரிக்கையொன்றைபல்கலைக்கழகமானியஆணைக்குழுதலைவர் எழுத்து மூலம் துணைவேந்தருக்குஅறிவித்திருந்தால் அதுவும் இவ் விதிமுறைமீறலுக்கானமற்றொருஆதாரமாகவிளங்கும். பீடாதிபதிகள் - துணைவேந்தரால் வற்புறுத்தப்பட்டாலும் கூட -விதிமுறைமீறல் சுற்றுநிருபங்களைத் தமதுபீடத்திலுள்ளதுறைத்தலைவர்களுக்கும் ஏனைய பணியாளர்களுக்கும் விநியோகிப்பதைத் தவிர்க்கவேண்டும்.

தேர்தல் ஆணையாளர் தேர்தல் காலக்கெடுக்குள் இடம்பெறும் துஷ்பிரயோகத்தினைதவிர்க்கும் நோக்கில் 22.11.2014 திகதியிடப்பட்ட Pசுநுஃ2014ஃ45 இலக்கமிட்டசுற்றுநிருபமொன்றை“மிகவும் முக்கியமானது”எனக் குறிப்பிட்டுபதிவுத்தபால் மூலம் அரசாங்க கூட்டுத்தாபன,பல்கலைக்கழகம் உள்ளிட்டநியதிச் சபைகளுக்கும் அனுப்பியிருந்தார்.

2. மேலும் தேர்தல் காலக்கெடுஅறிவிக்கப்பட்டபின்னர்,கல்விசாராஊழியர்களின் ஆட்சேர்ப்புக்கானநடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அரசியல் வாதியொருவரின் சிபாரிசின் பேரில் உயர் கல்விஅமைச்சுவழங்கியபட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களின் முகவரிக்குபல்கலைக்கழகவேலைக்கானவிண்ணப்பப்படிவங்களைப் பல்கலைக்கழகநிர்வாகம் அனுப்பிவருகின்றது.

தேர்தல் காலத்தில் ஆட்சேர்ப்புக்களைமேற்கொள்வதில் உள்ளமட்டுப்பாடுகள் பற்றிதேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளபோதிலும் அந்தஅறிவிப்பைஎமதுபல்கலைக்கழகப் பதிவாளர் தவறாகவியாக்கியானம் செய்வார் என்பதையும் நாமறிவோம். எனவே இவ்விடயத்தைசுயாதீனதேர்தல் கண்காணிப்புகுழுக்களுக்கும் தேர்தல் ஆணையாளருக்கும் சமர்ப்பிக்கமுடிவுசெய்துள்ளோம்.

3. கொழும்பில் இடம்பெறும் தேர்தல் பரப்புரைகளுக்கும் பரப்புரைதொடர்பானஆலோசனைக் கூட்டங்களுக்கும் “உயர்கல்விமீளாய்வு கூட்டம்”எனவும் வேறுபெயர்களும் இட்டுபல்கலைக்கழகவாகனங்களையும்,ஆதனங்களையும்,நிதியையும் துஷ்பிரயோகம் செய்துவருவதுகண்டுவேதனையுறுகின்றோம்

4. அரசியல் வாதியொருவரின் சிபாரிசின் மூலம் பல்கலைக்கழகத்தில் நியமனம் பெற்றஊழியர்கள் தேர்தல் பிரச்சாரத்துக்காககடமைநேரத்தில் குறுகியகாலவிடுப்பில் அழைத்துச் செல்லப்படுகின்றனர்
மொத்தத்தில்,கற்றவர்கள் சிலரின் -தகைமைக்குஒவ்வாதபாமரத்தனமான-நடவடிக்கைகளால் யாழ்ப்பாணச் சமூகத்தின் முன் பல்கலைக்கழகத்தைச் சார்ந்தசகலரும் வெட்கித் தலைகுனியவேண்டியநிலைஏற்பட்டுள்ளது.

பல்கலைக்கழக ஊழியர் சங்கம்,
யாழ் பல்கலைக்கழகம்.

No comments:

Post a Comment