November 27, 2014

கலாநிதி சேரமான் எழுத்திய "கனடியத் தமிழர்களைக் குறிவைக்கும் சிங்களம்"!

தமிழீழ தேச விடுதலைக்காகத் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த அனைத்து மாவீரர்களையும் நினைவுகூரும் முகமாக 1989ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் நாளன்று தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் ஆரம்பித்து
வைக்கப்பட்ட தமிழீழ தேசிய மாவீரர் நாள், இன்று தமிழீழத் தனியரசை நிறுவுவதில் உலகத் தமிழினம் கொண்டுள்ள பற்றுறுதியைப் பறைசாற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகத் திகழ்கின்றது.
பண்டைக் காலம் தொட்டுத் தமிழர்களிடையே ஓர் வழக்கு இருந்தது. மன்னர்களையும், தலைவர்களையும், சான்றோர்களையும் போற்றிப் புகழ்வதும்இ அவர்களின் சாதனைகளை நினைவுகூர்வதுமே அதுவாகும். சங்க காலமாக இருந்தாலும் சரி, அதற்கு முந்திய வரலாற்றுக்கு முற்பட்ட காலமாக இருந்தாலும் சரி, இடைக்காலமாக இருந்தாலும் சரி, நவீன யுகமாக இருந்தாலும் சரி இதுதான் நடைமுறையாக இருந்துள்ளது. துட்டகாமினிக்கு எதிராகப் போர்புரிந்து களப்பலியாகிய எல்லாளனாக இருந்தாலும் சரி, தென்னாசியாவில் வலிமை வாய்ந்த தமிழ்ப் பேரரசுகளை நிறுவிய கரிகாற்பெருவளன், இராசராச சோழன்இ இராசேந்திர சோழன் போன்ற மாமன்னர்களாக இருந்தாலும் சரி, மேலைத்தேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வீரப்போர் புரிந்து மடிந்த சங்கிலி குமாரன், பண்டார வன்னியன், கட்டப்பொம்மன் போன்ற மன்னர்கள்இ நல்லநாச்சியார், வேலுநாச்சியார் போன்ற அரசிகளாக இருந்தாலும் சரி தலைவர்களையே போற்றிப் புகழ்ந்து, நினைவுகூரும் வழக்கு எம்மிடையே இருக்கின்றது. இங்கு இவர்களோடு நின்று களமாடி வீழ்ந்த வீரர்கள் எவரும் நினைவுகூரப்படுவதில்லை. அவர்கள் பற்றிய பதிவுகளும் எம்மிடமில்லை.
இந்நிலையை மாற்றியமைத்து, தமிழீழ தேச விடுதலைக்காகத் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த அனைத்து மாவீரர்களையும் கௌரவித்து நினைவுகூரும் முகமாகவே தமிழீழ தேசிய மாவீரர் நாளை தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார். இதன் வெளிப்பாடாக 1989ஆம், 1990ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மாவீரர் நாட்களில் முற்றுமுழுதாக மாவீரர்களை நினைவுகூரும் வகையிலான உரைகளையே தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் ஆற்றியிருந்தார்.
ஆனால் 1991ஆம் ஆண்டு இதற்குத் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் புதுமெருகூட்டினார். முதல் இரண்டு ஆண்டுகளிலும் மாவீரர்களை நினைவுகூரும் வகையில் மட்டும் தனது உரைகளை ஆற்றிவந்த தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள், 1991ஆம் ஆண்டிலிருந்து அவ்வுரைகளை மாவீரர்களை நினைவுகூரும் உரைகளாக மட்டுமன்றி, தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றிய கொள்கைப் பிரகடன உரைகளாகவும் மேம்படுத்தினார். அன்று முதல் 2008ஆம் ஆண்டு வரையான தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரைகள் அனைத்தும் மாவீரர்களையும் நினைவுகூரும் வகையிலும், தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் தொடர்பான அவரது கொள்கைப் பிரகடனங்களைத் தமிழர்களுக்கும், உலகிற்கும் வெளிப்படுத்தும் விதத்திலுமே இருந்துள்ளன.
வரலாற்றுச் சிறப்பு மிக்க தமிழீழ தேசியத் தலைவரின் இந்த முடிவு, மாவீரர் நாளுக்குப் புதிய பரிமாணத்தைக் கொடுத்தது. ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் நாளன்று மாவீரர்களை நினைவுகூர்ந்தும், தனது அடுத்த கட்ட அரசியல் வியூகங்கள் பற்றி எடுத்து விளக்கியும், தலைவர் அவர்கள் உரையாற்றுவார். தமிழீழ தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களிலும், நினைவாலயங்களிலும், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் ஒவ்வொரு மேற்குலக நாடுகளிலும், தமிழகத்திலும், ஏனைய உலக நாடுகளின் ஒழுங்கமைக்கப்பட்ட இடங்களிலும் அனைவரும் ஒன்றுகூடிநின்று தலைவர் அவர்களின் உரையைச் செவிமடுப்பார்கள். தலைவர் அவர்களின் உரை நிறைவுற்றதும் தலைவரின் கொள்கைப் பிரகடனத்தை ஏற்றுக் கொண்டதற்கான சமிக்ஞையாக ஒவ்வொரு தமிழர்களும் சுடர்களை ஏற்றி மாவீரர் துயிலும் இல்லப் பாடலைக் கண்ணீர் மல்கப் படிப்பார்கள்.
''...தலைவனின் பாதையில்
தமிழினம் உயிர் பெறும் 
தனியரசு என்றிடுவோம்.
எந்த நிலை வரும் போதிலும் நிமிருவோம்
உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்.''
என்ற வரிகளுடன் மாவீரர் துயிலும் இல்லப் பாடல் நிறைவுக்கும் வரும் பொழுது தமிழீழ தனியரசை நிறுவுவதற்கான பற்றுறுதியை ஒவ்வொரு தமிழர்களும் வெளிப்படுத்தி உணர்ச்சிப் பிரவாகமெடுத்து நிற்பார்கள்.
அதாவது எமது தேசத்தின் விடுதலைக்காகத் தமது உயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவுகூர்வதற்காக மட்டுமன்றி, தமிழீழ தனியரசை நிறுவுவதற்கான உறுதிமொழியை உலகத் தமிழினம் எடுத்துக் கொள்வதற்கும், தமிழீழ தேசியத் தலைவர் அவர்களே தமிழினத்தின் ஒரே தலைவர் என்பதை உலகிற்கு இடித்துரைக்கும் நாளாகவுமே 1991ஆம் ஆண்டிலிருந்து 2008ஆம் ஆண்டு வரை மாவீரர் நாள் திகழ்ந்திருக்கின்றது.
2009 மே 18இற்குப் பின்னரான தற்போதைய சூழமைவில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடனான தொடர்பை உலகத் தமிழினம் இழந்திருந்தாலும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் அனைவரையும் ஒன்றிணைத்துத் தமிழீழத் தனியரசை நிறுவும் பற்றுறுதியை உலகிற்கு வெளிப்படுத்தும் நாளாக இப்பொழுதும் மாவீரர் நாள் விளங்கி வருகின்றது.
இது சிங்களத்தைப் பொறுத்தவரை ஏற்புடைய ஒன்றன்று. இன்று தமிழீழ தாயகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரசன்னம் இல்லையென்றாலும்கூட, தமிழீழ தனியரசை நிறுவும் எண்ணக்கரு உலகத் தமிழர்களின் இதயங்களில் இருந்து இல்லாதொழிக்கப்படாத வரைக்கும் தமிழீழம் - சிறீலங்கா என்ற இருகூறுகளாக ஈழத்தீவு பிரித்தெடுக்கப்படுவதை தடுக்க முடியாது என்பது சிங்களத்திற்குத் தெரியும். ஆயுதப் போராட்டத்தில் தமிழர்கள் தோல்வி கண்டிருந்தாலும், காலநீட்சியில் அரசியல் போராட்டத்தின் மூலம் தமிழீழத் தனியரசை அவர்கள் நிறுவி விடுவார்கள் என்ற அச்சம் சிங்களத்திற்கு உண்டு.
இந்திய சுதந்திரப் போராட்டமாக இருந்தாலும் சரி, கிழக்குத் தீமோரியர்களின் விடுதலைப் போராட்டமாக இருந்தாலும் சரி, கொசவோ மக்களின் விடுதலைப் போராட்டமாக இருந்தாலும் சரி, ஒடுக்கப்பட்ட மக்களின் ஆயுதப் போராட்டங்கள் தோல்விகளுக்கும், பின்னடைவுகளுக்கும் ஆளானாலும் இறுதியில் அவர்களின் அரசியல் இலட்சியம் நிறைவேறும் என்பதே வரலாறு புகட்டும் பாடமாகும். இதனை எம்மவர்கள் புரிந்து கொள்கின்றார்களோ இல்லையோ, சிங்களம் நன்கு புரிந்து கொண்டுள்ளது.
தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரை 2009 மே 18இற்குப் பின்னரான சூழமைவில் தமிழீழத் தனியரசுக்கான எண்ணக்கருவை, அதாவது தமிழீழம் என்ற கருத்தியலை அணையவிடாது பாதுகாக்கும் நடுவண் நாளாகவே மாவீரர் நாள் விளங்கி வருகின்றது.
இதனால்தான் மாவீரர் நாளை இலக்கு வைத்து பல்வேறு திருவிளையாடல்களை ஆண்டுதோறும் புலம்பெயர் தேசங்களில் சிங்களம் அரங்கேற்றி வருகின்றது. 2009 மே 18இற்குப் பின்னர் கே.பியை தமிழினத்தின் தலைவராக முன்னிறுத்தும் முயற்சியில் மண்கவ்விய சிங்களம், 2009ஆம் ஆண்டு மாவீரர் நாளன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அம்பாறை மாவட்ட தளபதி ராம் அவர்களை தமிழீழ தேசியத் தலைவருக்கு மாற்றீடாக நிறுத்துவதற்குப் பிரயத்தனம் செய்தது. எனினும் அதுவும் பிசுபிசுத்துப் போக, கே.பியின் கையாட்களையும், தமது அடிவருடிகளாக மாறிய முன்னாள் போராளிகளையும் பயன்படுத்தி 2011ஆம் ஆண்டு புலம்பெயர் தேசங்களில் போட்டி மாவீரர் நாள் நிகழ்வுகளை நடாத்தியது. அதிலும் குறிப்பாகப் பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய இரு ஐரோப்பிய நாடுகளிலேயே அதிக அளவில் தனது கைக்கூலிகளைக் களமிறக்கி இதற்கான முயற்சிகளை சிங்களம் எடுத்தது. இதற்காகத் தேசிய செயற்பாட்டாளர்கள் மீது பல்வேறு அவதூறுகள் - வீண்பழிகள் சுமத்தப்பட்டன. எனினும் இவை எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை.
இதனையடுத்து தனது இயலாமையை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் பிரான்ஸ் தேசத்திற்கு தனது கொலைக் கரங்களை நீட்டிய சிங்களம், 2012ஆம் ஆண்டு பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் பரிதி அவர்களைப் படுகொலை செய்தது. எனினும் அதுவும் எதிர்பார்த்த பலனை அளிக்காத நிலையில் பிரான்சை தளமாகக் கொண்டியங்கிய ஈழமுரசு பத்திரிகையின் மூத்த செயற்பாட்டாளர் ஒருவர் மீது கொலை முயற்சியை மேற்கொண்டு, தற்பொழுது அப்பத்திரிகை இயங்க முடியாதவாறு தனது அடாவடித்தனத்தை சிங்களம் தொடர்கின்றது.
போட்டி மாவீரர் நாள் நிகழ்வுகள் மூலம் ஐரோப்பாவில் எதையும் சாதிக்க முடியாது என்ற நிலையில் ஆயுதமுனையில் ஐரோப்பாவாழ் தமிழீழ மக்களை அடிபணிய வைக்கலாம் எனக் கனவுகாணும் சிங்களம், மறுபுறத்தில் 'பழைய குருடி கதவைத் திறவடி' என்ற கதையாகக் கண்டம் கடந்து கனடாவில் போட்டி மாவீரர் நாள் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்வதற்காகக் கே.பியின் கையாட்களைக் களமிறக்கி விட்டுள்ளது.
கனடாவைப் பொறுத்தவரை மாவீரர் நாள் என்பது 2009 மே 18இற்குப் பின்னர் கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவத்தால் பொறுப்பேற்கப்பட்டு ஆண்டுதோறும் நடாத்தப்பட்டு வருகின்றது. உலகில் அதிக அளவில் தமிழீழ மக்கள் வாழும் நாடு என்றால் அது கனடா தான். எத்தனை கருத்து வேற்றுமைகள் இருந்தாலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக மாவீரர் நாளை ஒற்றுமையுடன் கனடாவாழ் தமிழீழ மக்கள் நடாத்தி வருகின்றார்கள். இது சிங்களத்திற்குப் பெரும் உறுத்தலாக இருக்கின்றது. இதனால்தான் இவ்வாண்டு கனடாவில் நடைபெறும் மாவீரர் நாளை இலக்கு வைத்துக் கே.பியின் கையாட்களை சிங்களம் களமிறக்கி விட்டுள்ளது.
சிங்களத்தின் இம்முயற்சியின் நடுநாயகர்களாக கே.பியின் செல்லப்பிள்ளைகளான நான்கு பேர் திகழ்கின்றார்கள். இவர்களில் முதலாவது நபர் தமிழீழ தேசிய சொத்துக்களை தனியார் உடமையாக்கி மக்கள் பணத்தில் ஏப்பம்விட்டு வாழ்பவர். கனடாவில் கே.பியின் நிதிப்பொறுப்பாளராகவும், பின்னர் பொறுப்பாளராகவும் விளங்கியவர். அடுத்தவர் கனடாவில் இருந்து கே.பியால் சுவிற்சர்லாந்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அந்நாட்டிற்குப் பொறுப்பாகச் சிறிது காலம் இருந்து பின்னர் மீண்டும் கனடாவிற்கான பொறுப்பாளராகக் கே.பியால் நியமிக்கப்பட்டவர். மூன்றாவது நபர் கனடாவில் இயங்கும் தமிழ்ப் பாடசாலைகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காகக் கே.பியால் நியமிக்கப்பட்டவர். 2009 மே 18இற்குப் பின்னர் கே.பியின் பிரதிநிதியாகத் தமிழகம் சென்று பழ.நெடுமாறன் ஐயாவை சந்தித்து அவரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டவர். இவர்கள் மூவரும் தலைமையால் பணியில் இருந்து நீக்கப்பட்டவர்கள். நான்காவது நபர் கனடாவில் தமிழ்த் தேசிய அரசியல் பணிகளை முன்னெடுப்பதெற்கென்று தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்களின் கீழ் உருவாக்கப்பட்ட உப அமைப்பொன்றை 2009 மே 18இற்குப் பின்னர் கே.பியின் கைப்பாவை அமைப்பாவை மாற்றியமைத்தவர். 2005ஆம் ஆண்டிலிருந்து 2009 மே 18 வரை தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்களின் கொடுப்பனவில் இயங்கிய இவர்இ இரவோடு இரவாக சம்பந்தப்பட்ட உப அமைப்பின் யாப்பை மாற்றியமைத்து அவ்வமைப்பை கே.பியின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு வழிகோலியவர். இன்று இவ் அமைப்பு தமிழீழத்தில் சிங்களம் புரிந்தது இனப்படுகொலை என்ற மெய்யுண்மையை மறுதலிக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டு வருகிறது. 
இந்த நான்கு நாயன்மார்களின் மதியுரைஞராக 'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்று மேடைகளில் முழங்கிக் கொண்டு படைப்பாளிகளின் தலைவன் என்று தனக்குத் தானே மகுடம் சூடிக் கொண்டிருக்கும் ஒருவர் உள்ளார். போர் ஓய்வுக் காலப்பகுதியில் திருமலையில் தனது கையால் ஏற்றிய தமிழீழ தேசியக் கொடியாகிய பாயும் புலிக்கொடியை வீசியெறிந்து விட்டுஇ யாழ்ப்பாணத்தில் வாளேந்திய சிங்கக் கொடியை ஏந்திப் பிடித்துத் 'தமிழீழத்தை நாங்கள் விரும்பவில்லை'இ 'புலிகள் பயங்கரவாதிகள்' என்று முழங்கும் இராஜவரோதயம் சம்பந்தர் அவர்களுக்கு இவர் பரிவட்டம் கட்டுபவர்.
இந்த ஐந்து புலித்தோல் அணிந்த நரிகளின் தலைமையிலேயே கனடாவில் போட்டி மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகளை சிங்களம் மேற்கொண்டு வருகின்றது. இதற்கு இவர்களால் முன்வைக்கப்படும் வாதம்இ மாவீரர் நாள் என்பது எவராலும் எங்கும் நடத்தப்படலாம் என்பதாகும்.
மாவீரர்களைத் தாம் விரும்பும் இடங்களில் நினைவுகூரும் உரிமை ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உண்டு. உதாரணமாக உடல்நலம் குன்றிய நோயாளி ஒருவர் தான் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துமனையில் இருந்தவாறே மாவீரர்களை நினைவு கூரலாம். அதேபோன்று கடமையின் நிமித்தம் தொலைதூரப் பயணம் மேற்கொள்பவர்கள் அல்லது தவிர்க்க முடியாத காரணங்களினால் ஒழுங்கமைக்கப்பட்ட இடங்களுக்கு வர முடியாதவர்கள் தாம் நிற்கும் இடத்திலேயே மாவீரர்களை நினைவுகூரலாம். இதனால்தான் தமிழீழ நடைமுறை அரசு இயங்கிய 2009 மே 18இற்கு முன்னரான காலப்பகுதியில் தமிழீழ தாயகத்தில் தலைவர் அவர்களின் உரை நிறைவடைந்ததும் மாலை 6 மணி 5 நிமிடத்திற்கு அனைத்து ஆலயங்களிலும் ஒரு மணித்துளிக்கு மணியொலி எழுப்பப்படும். அப்பொழுது அவசர சேவைப் பணியாளர்கள்இ காவல் கடமைகளில் ஈடுபடும் வீரர்கள் தவிர்ந்த ஏனைய அனைவரும் தமது பணிகளை நிறுத்தித் தாம் நிற்கும் இடங்களில் அப்படியே நிற்பார்கள். அதன் பின்னர் 6 மணி 6 நிமிடத்திற்கு அகவணக்கம் செலுத்திஇ 6 மணி 7 நிமிடத்திற்கு சுடரேற்றுவார்கள். மாவீரர் துயிலும் இல்லங்கள்இ நினைவாலயங்களில் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெறும் ஏக காலத்தில் இவ்வாறு தனிநபர்களால் தனித்தனியாக மாவீரர்களை நினைவுகூர்வதற்குத் தமிழீழ நடைமுறை அரசில் அனுமதியளிக்கப்பட்டிருந்தது. எனவே தான் விரும்பும் இடத்தில் நின்று மாவீரர்களை ஒருவர் நினைவுகூர்வது தவறில்லைதான்.
ஆனால் மாவீரர் நாள் நிகழ்வு என்பது அவ்வாறானதன்று. அது ஒரு தனிமனிதரின் விருப்பு – வெறுப்புக்களுடனோ, சந்தர்ப்ப சூழ்நிலைகளுடனோ சம்பந்தப்பட்ட விடயம் அன்று. அது உலகத் தமிழர்களின் அடிநாதத்தின் பிரதிபலிப்பாக விளங்கும் நிகழ்வாகும்.
இப்பத்தியின் ஆரம்பத்தில் நாம் சுட்டிக் காட்டியது போன்று மாவீரர் நாள் நிகழ்வு என்பது மாவீரர்களைக் கௌரவித்து நினைவுகூரும் நிகழ்வு மட்டுமன்றி, தமிழீழத் தனியரசை நிறுவும் பற்றுறுதியை உலக சமூகத்திற்குத் தமிழினம் வீறுகொண்டு இடித்துரைக்கும் எழுச்சி நாளாகும்.
தமிழீழ நடைமுறை அரசு இயங்கிய காலப்பகுதிகளில் போட்டி மாவீரர் நாள் என்ற பேச்சுக்கே இடமிருந்ததில்லை. ஒவ்வொரு நாடுகளிலும் தமிழீழ தேசியக் கட்டமைப்புக்களால் ஒழுங்கமைக்கப்பட்ட இடங்களில் ஒற்றுமையுடன் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்றன. 'நான் பெரிதுநீ பெரிது' என்றோ 'நாங்கள் விரும்பும் இடத்தில், நாங்கள் விரும்பியவாறு மாவீரர் நாள் நிகழ்வை நடத்துவோம்' என்றோ அன்று எவரும் நரிவாதம் பேசியதில்லை. ஒவ்வொரு நாடுகளிலும் ஒழுங்கமைக்கப்பட்ட ஓரிடத்தில், ஒரே நேரத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்றன. தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மட்டுமே வெவ்வேறு இடங்களிலும் வெவ்வேறு நாட்களிலும் - நேரங்களிலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன் மூலம் தமிழீழ தேசியத் தலைவரின் வழிகாட்டலில் தமிழீழத் தனியரசை நிறுவும் தமது பற்றுறுதியை உலகத் தமிழர்கள் வெளிக்காட்டினார்கள். இப்பற்றுறுதி 2009 மே 18இற்குப் பின்னரான சூழமைவில் தொடர்ந்தும் ஒற்றுமையுடன் வெளிப்படுத்தப்பட வேண்டியதாகும். எனவே சிங்களத்தின் தாளத்திற்கு நர்த்தனமாடும் புலித்தோல் அணிந்த நரிகளால் போட்டி மாவீரர் நாள் நிகழ்வுகள் நடாத்தப்படுவதற்கு நாம் இடமளிப்பது எமது தேச சுதந்திரப் பயணத்திற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடும். அதுவும் அப்பட்டமாக சிங்களத்தின் கைப்பாவையாக இயங்கும் கே.பியை 'சூழ்நிலைக் கைதி' என்று விளித்தும்இ 'சிங்கக் கொடி ஏந்துவதில் தவறில்லை' சுதந்திரப் போராளிகளைப் 'பயங்கரவாதிகள் என்று அழைப்பதில் குற்றமில்லை' என்று கூறி நரிவாதம் பேசுபவர்கள் மாவீரர் நாள் நிகழ்வை நடாத்துவதற்கு கனடியத் தமிழர்கள் இடமளிப்பது சிங்களத்தின் நிகழ்ச்சித் திட்டம் வெற்றிபெறுவதற்கே வழிகோலிவிடும்.

No comments:

Post a Comment