August 28, 2014

கேப்பாபுலவு காணி அரச காணியாம்! புதுவிளக்கம் தரும் இராணுவம்!

முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்பிலவு பிரதேசத்தில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 250 ஏக்கர் நிலப்பகுதியும் இலங்னை அரசிற்கு
சொந்தமானதென அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டதில் 245 ஏக்கர் வயல் காணிகளில்  பயிர்ச் செய்கை மேற்கொள்வதற்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என இராணுவம் அறிவித்துள்ளது.

அத்துடன் முல்லைத்தீவு பிரதேசத்தில் புலிகள் அமைத்திருந்த விமான ஓடுபாதையை குறித்த பிரதேசத்து பொதுமக்களின் எதிர்கால பயன்பாட்டிற்கென இராணுவத்தினர் அபிவிருத்தி செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இப்பிரதேசத்தில் மொத்தம் 250 ஏக்கர் விவசாய காணிகள் உள்ளன. அவற்றில் இந்த 5 ஏக்கர் தவிர்த்து மீதி 245 ஏக்கர் வயல் காணிகளையும் விவசாய நடவடிக்கைகளுக்கு வழங்க உரிய நடவடிக்கைகள் பூர்த்தியடைந்துள்ளன.   

அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படும் 5 ஏக்கர் காணிக்குரிய 3 குடும்பங்களுக்கு வேறு இடத்தில் வயல் காணிகள் வழங்கப்படவுள்ளன. அதற்கு அந்த 3 குடும்பத்தினரும் இணக்கம் தெரிவித்துள்ளனரென இலங்கை அரசு அறிவித்துள்ளது.   இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் இந்த 250 ஏக்கர் வயல் காணிகளும் அரசுக்குச் சொந்தமானவை எனவும் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக மட்டுமே அப்பிரதேச கிராம மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேப்பாபுலவினில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களது பூர்வீக காணிகள் விவகாரம் ஜ.நா வரை சூடுபிடித்துள்ள நிலையிலேயே அரசு இத்தகைய அறிவிப்பினை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment