August 28, 2014

இந்திய துணைதூதர் அவமதிப்பு! சீற்றத்தில் தூதரக அதிகாரிகள்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய இடங்களில் இன்று நடைபெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளவென ஜனாதிபதியின் சகோதரரும் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி
அமைச்சர் பஸில் ராஜபக்ஸ வருகை தந்த நிகழ்வில் இந்திய துணைதூதர் அவமதிக்கப்பட்டமை தூதரக அதிகாரிகளிடையே கடும் சீற்றத்தை தோற்றுவித்துள்ளது. முதலில் யாழ்.வரும் பஸில் யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கை புனரமைக்க அடிக்கல் நடுகின்றார். இதற்கான நிதியினை இந்திய அரசே வழங்கியுள்ளது.



அத்துடன் இந்திய அரசின் நிதியின் பங்களிப்புடன் மீள் நிர்மாணம் செய்யப்பட்ட அச்சுவேலி கைத்தொழில் பேட்டையை இன்று புதன்கிழமை முற்பகல் 11.30 மணியளவில்; டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து பஸில் திறந்துவைக்கவுள்ளார். அதை தொடர்ந்து பிற்பகல் 2 மணியளவில் பூநகரி ஆதார வைத்தியசாலையும் அவர் திறந்து வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையினில் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கிற்கு உலங்கு வானூர்தி மூலம் வருகை தரவிருந்த பஸிலை வரவேற்க சென்றிருந்த இந்திய துணைதூதர் மூர்த்தி வருகை தந்திருந்த நிலையில் அவர் நுழைவாயிலில் வழிமறிக்கப்பட்டு சோதனைக்குள்ளாக்கப்பட்டிருந்தார். சாதாரண பொதுமக்களை போன்று தாமதிக்க வைக்கப்பட்டே அவர் உட்செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார். தூதரக அதிகாரிகள் இதனால் கடும் சீற்றமடைந்திருந்தனர். எனினும் அவரது சாரதி எந்தவித சோதனையுமின்றி உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்திய அரசினது நிதி உதவியின் கீழாக முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்ட நடவடிக்கைகளினில் இலங்கைக்கான பிரதிநிதியாக செயற்படும் மூர்த்தி அவமதிக்கப்பட்டமையே அதிகாரிகளிடையெ சீற்றத்தினை தோற்றுவித்துள்ளது.

No comments:

Post a Comment