August 25, 2014

கொழும்பில் நீதிமன்றம் முன்னாள் குழுமோதல் ஒருவர் பலி!

கொழும்பு - புதுக்கடை நீதி மன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற கத்திக் குத்தில்  ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்து
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது
வழக்கு விசாரணைகளுக்காக வந்த இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலே இதற்குக் காரணம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில்  ஒரு இளைஞரும் ஒரு யுவதியும் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment