ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்றுக்காலை தனிப்பட்ட பயணமாக அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். அமெரிக்காவில் வசிக்கும்
ஜனாதிபதியின் சகோதரர் டட்லி ராஜபக்ஷ, அண்மையில் இலங்கை வந்திருந்தார். அவருடன் மருத்துவ பரிசோதனைக்காக ஜனாதிபதி நேற்றுக் காலை கொழும்பில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக அலரிமாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, ஜனாதிபதி பயணித்த விமானத்தில் முன்பதிவு செய்திருந்த நான்கு தமிழர்களின் விமானப் பயணம் கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. வேறு விமானங்கள் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும் வரை அவர்கள் விமான நிலையத்தில் இக்கட்டான நிலையில் தவிக்க நேர்ந்ததாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment