யாழ்ப்பாணத்தின் நல்லூர்க் கந்தன் ஆலய வருடாந்த இரதோற்சவப் பெருவிழா இன்று வெகுசிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 6 மணிக்கு வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து 7 மணியளவில் கந்தன் தேர் ஏறி வீதி
வலம் வந்தார்.உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து வருகை தந்திருந்த இலட்சக்கணக்கான பக்தர்கள் நல்லூர்க் கந்தன் தேரில் ஆடி அசைந்து வருவதனை கண்டு மெய் மறந்து தரிசித்தனர்.
பக்தர்களின் வசதி கருதி மாநகரசபையினரும், பொலிஸாரும், தொண்டர் அமைப்புக்களும் பல்வேறு ஏற்பாடுகளினைச் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
434 total views, 434 views today
No comments:
Post a Comment