August 28, 2014

யாழில் நள்ளிரவு வீட்டிற்குள் புகுந்த படையினன்!


யாழ் குருநகர் தொடர்மாடிக் குடியிருப்புப் பகுதிக்கு அண்மையில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறிப் புகுந்த படையினன் ஒருவர் பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டார்.

நேற்று புதன்கிழமை நள்ளிரவு குருநகர் பகுதியில் உள்ள வீடொன்றினுள் சிப்பாய் ஒருவர் அத்துமீறிப் புகுந்துள்ளார்.
குறித்த படையினனை கண்ட வீட்டார் கூக்குரலிடவே ஊர் மக்கள் திரண்டு அந்தச் சிப்பாயை மடக்கிப்பிடித்து கட்டி வைத்தனர்.
பின்னர் அவர் யாழ்ப்பாணம் காவல்துறையிடம் நேற்றிரவு ஒப்படைக்கப்பட்டார். அவர் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment