காணமல் போனவர்களை மீட்கும் புனிதப் போரில் நாம் ஒவ்வொருவரும் ரவுல் வொலன்பெக் ஆக மாறவேண்டும் மனித உரிமை ஆர்வலரும் எழுத்தாளருமான சண் மாஸ்டர் அறைகூவல்.
சர்வதேசரீதியாக அனைத்துலக காணாமல் போனோர் தினம் ஆவணி 30ம் திகதி உலகமெங்கும் நினைவு கூரப்படுகிறது காணாமல் போனோர் பிரச்சினை தேசங்கள் கடந்து உலகலாவிய பிரச்சனையாக விஸ்வரூபம் எடுத்ததன் விளைவாகவே காணாமல் போனோர் பிரச்சனையை அனைவரினதும் கவனத்திற்கு கொண்டு சென்று மனித தர்மத்தையும் மனித கௌரவத்தையும் நிலைநாட்டவேண்டும் என்ற நல்லெண்ண நோக்கோடு ஐக்கிய நாடுகள் சபை ஆவணி 30ம் திகதியை அனைத்துலக காணமல்போனோர் தினமாக பிரகடனம் செய்தது.
உலகெங்கும் காணாமல் போன பல்லாயிரக்கணக்கானோர் மற்றும் அவர்களின் இருப்புப் பற்றி சிறு தகவலாவது கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் இரவையும் பகலாக்கி விழித்திருக்கும் காணாமல் போன குடும்ப உறவுகளின் துன்ப துயரங்களில் நாம் அனைவரும் பங்கெடுக்கவேண்டும் என்ற மனித தர்மச்சிந்தனையை ஒவ்வொரு மனிதர்களும் தமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற வாய்ப்பை இத்தினம் நமக்கு அளிக்கின்றது.
காணாமல் போனவர்களை மீட்டு அவர்களின் குடும்பங்களுடன் இணைக்கவேண்டும் காணாமல் போனவர்களை வேட்டையாடியவர்களை நீதிக்கு முன் நிறுத்தவேண்டும் எதிர் காலத்தில் காணாமல் போவது முற்றாக தடுக்கப்படவேண்டும் காணமல் போன குடும்பங்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு பங்களிப்புச் செய்யவேண்டும் போன்ற பண்முக இலக்குகளை முன்வைத்தே இத்தினம் கொண்டாடப்படுகிறது உலகலாவிய ரீதியில் மொத்தமாக எத்தனை பேர் காணாமல் போயிருக்கின்றார்கள் என்று எவருக்கும் திட்டவட்டமாகத் தெரியாது ஆனால் இந்த எண்ணிக்கை இலட்சக்கணக்கில் இருக்கும் என்று மனித உரிமைக்காக குரல் கொடுக்கும் மையங்கள் எதிர்வு கூறுகின்றன காணாமல் போனோர் பிரச்சனை இன்று உலகலாவியரீதியில் முக்கிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது மனித உரிமையையும் மனித கௌரவத்தையும் பாதுகாப்பதற்காக சர்வதேச மட்டத்தில் எத்தனை அமைப்புக்கள் செயற்பட்டாலும் உலகில் காணாமல் போனோர் பட்டியல் நாளுக்கு நாள் நீன்டுகொண்டே செல்வது மனித குலத்தின் இருப்புக்கே ஆபத்தாக மாறியுள்ளது.
மனிதன் நாகரிகத்தின் உச்சிக்கே சென்று சென்று விட்டான் மனிதனின் ஆற்றல் பிரபஞ்சத்தையும் தாண்டி விட்டதாக மார்தட்டிக் கொண்டாடும் இன்றய நவீன உலகிலே மனிதனை மனிதனே வேட்டையாடும் காட்டுமிரான்டி செயல் காரணமாகவே காணாமல் போனோர் என்ற புதிய அடையாளம் மனிதனுக்கு கொடுக்கப்பட்டு காணாமல் போனோர் தினத்தை வேதனையுடன் கொண்டாடும் நிலைக்கு உலகம் தள்ளப்பட்டுள்ளது .
வட அமெரிகாவிற்கும் தென் அமெரிக்காவுக்கும் இடைப்பட் பிரதேசத்தில் அமைந்துள்ள குடியரசு நாடாகிய கொஸ்டாரிக்காவில் 1981இல் ஆரம்பிக்கப்பட்ட கைதாகிக் காணமற்போவோரின் கூட்டமைப்பு (Federation of Associations for relatives of the Detained - disappeared (FEDEFAM) என்ற அமைப்பே காணாமல்போன பிச்சினையை சர்வதேச மயப்படுத்தி அனைவரினதும் கவனத்தை ஈர்க்கவேண்டும் என்ற நோக்கோடு ஐநாவினதும் ஏனைய மனித உரிமை அமைப்புகளின் கவனத்திற்கும் எடுத்துச் சென்றதன் விளைவாகவே அனைத்துலக காணாமல் போனோர் தினம் ஐனாவினால் பிரகடனம் செய்யப்பட்டது காணாமல் போனோரை மீட்பதற்காக ஐனநாயக ரீதியாக குரல் கொடுத்த முதன்மைக் கட்டமைப்பாக தன்னை வரலாற்றில் பதிவு செய்து கொண்டது காணாமல் போனோரை மீட்கும் புனிதப் போரில் உலக மக்களால் இன்று வரை போற்றப்படும் மாமனிதனாக சுவிடன் நாட்டைச் சேர்ந்த ரவுல் வாலன் பெக் (Raoul wallenberg இருக்கின்றார்.
இவர் தனது வாழ்நாள் முழுவதையும் காணமல் போனவர்களை மீட்பதற்காகவே அர்ப்பணித்தார் 20ம் நூற்றாண்டில் மிகச்சிறந்த மனிதாபிமானி என்று இன்றுவரை உலகம் கொண்டாடுகின்றது காணமல் போனோரை மீட்கும் புனிதப் பயணத்தில் இவர் சந்தித்த ஆபத்துக்களையும் அச்சுறுத்தல்களையும் வார்த்தைகளால் விபரிக்க முடியாது இவர் தனது வாழ்நாளில் காணாமல் போன ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டோரை மீட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன உலக வரலாற்றிலேயே தனி ஒரு மனிதனாக காணாமல் போன பல்லாயிரக் கணக்கானவர்களை மீட்டு வரலாற்றை தனதாக்கிக் கொண்டதோடு 20ஆம் நூற்றாண்டின் தலை சிறந்த மனிதாபிமானியாக வாழ்ந்த இந்த மனிதக் கடவுளை முன் உதாரணமாகக் கொண்டு காணமல் போன நம் உறவுகளை மீட்கும் ஐனநாயகப் பணியில் நாம் ஒவ்வொருவரும் முழு அர்ப்பணிப்புடன் பங்கெடுக்க வேண்டும் இலங்கைத் தீவில் யுத்தம் முடிவடைந்த பின்னரும் கானாமல்போனோர் பிரச்சினை தீர்க்கப்படாததோடு கானாமல்போகும் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது காணாமல் போனோரை மீட்பதிலும் அவர்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுவதிலும் அரசாங்கம் தொடர்ந்து அசமந்தப் போக்கையே காட்டிவருகிறது காணாமல் போனோர் தொடர்பில் ஐனாதிபதியினால் நியமிக்கப்பட் ஆணைக் குழு முன்மக்கள் நம்பிக்கையற்ற நிலையிலும் துணிச்சலுடன் தமது சாட்சியங்களை கண்ணீர்மல்க பதிவு செய்த பின்னரும் காணாமல் போனவர்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுவதில் அரசாங்கம் தொடர்ந்து விலகல்போக்கை காட்டி வருகின்றது .
அரசாங்கத்தின் இச் செயற்பாட்டை உலகின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதற்கு எதிர்வரும் 30ம் திகதி வருகின்ற அனைத்துல காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு காணாமல் போன குடும்ப அங்கத்தவர்களை ஒருங்கிணைத்து சழூக அமைப்புக்களினால் முன்னெடுக்கப்படுகின்ற நீதிக்கான சாத்வீக ஊர்வலங்களிலும் பொதுக் கூட்டங்களிலும் அனைவரும் கலந்து கொண்டு தமது மனித நேயத்தை வெளிப்படுத்த முன்வரவேண்டும் வேண்டும்
No comments:
Post a Comment