தமிழ் தேசியக்கூட்டமைப்பு 13 திருத்தச்சட்டத்தின் கீழான மாகாணசபைக்கான
அதிகாரபகிர்வு பற்றி பேசவே டெல்லி செல்வதை எதிர்த்தே வடக்கு முதல்வர்
விக்கினேஸ்வரன் பயணத்தை புறக்கணித்ததாக தகவல்கள்
வெளியாகியுள்ளது. இதன் எதிரொலியாக சம்பந்தன் மற்றும் விக்கினேஸ்வரனிடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் டெல்லிக்கு விஜயம் செய்த கூட்டமைப்பின் குழவில் முதலமைச்சர் விக்கினேஸ்வரனை பங்கெடுக்குமாறு சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளார். எனினும் டெல்லியில் இந்திய பிரதமர் மோடி மற்றும் ஏனைய தரப்புக்களை சந்திக்கையில் 13 திருத்தச்சட்டத்தின் கீழான மாகாணசபைக்கான அதிகாரபகிர்வு பற்றி பேசவே முடிவு செய்யப்பட்டுள்ளமை பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது.
எனினும் எந்தவித அதிகாரமுமற்றிருக்கும் வடமாகாணசபையில் எதையும் செய்யமுடியாது கையறு நிலையில் இருந்து வரும் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் 13 திருத்தச்சட்டத்தின் கீழான மாகாணசபைக்கான அதிகாரபகிர்வு என இந்தியாவிடம் திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருப்பது பயனற்றதென வாதிட்டுள்ளார். வாக்களித்த மக்களிடையே மாகாணசபை பற்றிய வெறுப்பு அதிகரித்து செல்கின்றது.ஊடகங்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துக்கொண்டிருக்கின்றன. மக்களிற்கு ஓராண்டு பூர்த்தியாகும் சூழலில் எதனையாவது செய்ய வேண்டுமென விக்கினேஸ்வரன் விரும்புகின்றார். அதனாலே தனது அதிருப்தியை வெளிப்படுத்த டெல்லி பயணக்குழுவிலிருந்து விலகியதாகவும் தெரியவருகின்றது.
டெல்லிக்கு வருகை தந்திருந்த குழவில் விக்கினேஸ்வரன் இல்லாமல் இருந்தமை பற்றி டெல்லியில் கேள்வி எழுந்திருந்த நிலையில் அவர் கடுமையான மனச்சோர்விற்கு உள்ளாகியுள்ளமை பற்றி தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையினிலேயே அவர் முதலமைச்சர் விக்கினேஸ்வரனை சந்திக்க விரும்புவதாக தெரிவித்திருந்ததாக தெரியவருகின்றது.

No comments:
Post a Comment