சென்னை புழல் சிறையில் நீண்டநாட்களாக உண்ணா விரதபோராட்டம் நடத்திவரும் செந்தூரனின் துணைவி தமிழர் முன்னேற்றப்படை
இயக்க நிறுவுனர் கீ.வீரலட்சுமியை சந்தித்து செந்தூரனின் உயிரை காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று (30-06-2014) திங்கட்கிழமை காலை சென்னை புழல் மத்திய சிறைச்சாலையில் தமிழர் முன்னேற்ற படை இயக்க தலைவர் பூவை நா.கணேசன் அவர்களை நம் இயக்க நிறுவனர் தமிழினி கி.வீரலட்சுமி அவர்கள் சந்தித்து நலம் விசாரித்துவிட்டு வெளியில் சென்றபோது அதே சிறைச்சாலையில் கடந்த ஏழு நாட்களாய் உண்ணா நிலையில் இருந்துவரும் செந்தூரனின் துணைவி கி.வீரலட்சுமியை நேரில் சந்தித்து செந்தூரனின் உயிரை காப்பாற்ற கோரியும் அவர் நடத்திவரும் போராட்டத்தை தாங்கள் கையில் எடுத்து மக்கள் மத்தியில் கொண்டுசேர்க்கும்படியும் கோரி மனு கொடுத்துள்ளார். அதை ஏற்றுக்கொண்ட கீ.வீரலட்சுமி அப்போராட்டத்தை கையில் எடுப்பதாக செந்தூரனின் துணைவிக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார்.
No comments:
Post a Comment