July 5, 2014

இராணுவத்தினருக்கு கூறி உங்கள் குடும்பப்பிரச்சினைகளை தீர்த்து இருக்கலாமே - ஜனாதிபதி ஆணைக்குழு

குடும்ப பிரச்சினைக்கு ஏன் இராணுவ உதவியை நாடவில்லை என ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையாளர் சாட்சியம் அளிக்க வந்த ஒருவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் சாட்சியம் அளிக்கும் நடவடிக்கை தற்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. அதன்போது மகனைக் காணவில்லை என சாட்சியளிக்க வந்த தயாரிடம் ஆணையாளர் மேற்கண்ட கேள்வியை எழுப்பியிருந்தார்.
மகனைக் காணவில்லை என சாட்சியமளித்த தாயாரிடம் உங்களது கணவர் இருக்கிறாரா என்ன செய்கின்றார் என்ற கேள்வியினை ஆணைக்குழுவினர் எழுப்பினர்.
அதற்குப்பதிலளித்த தாயார் எனது கணவன் குடிப்பவர் இதனால் எங்களுக்குள் தினமும் குழப்பம் தான் என்றார். அதன்போது இராணுவம் உங்கள் பக்கத்தில் உள்ளதா என்ற கேள்வியினை ஆணைக்குழுவினர் எழுப்பினர்.ஆம் என பதிலளித்த நிலையில் அப்படியானால் ஏன் நீங்கள் அருகில் இருக்கும் இராணுவத்தினருக்கு கூறி உங்கள் குடும்பப்பிரச்சினைகளை தீர்த்து இருக்கலாமே என்று கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த குறித்த தாயார் நான் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளேன் என்று பதிலளித்தார்.

No comments:

Post a Comment