July 24, 2014

காசா தொடர்பில் ஐ.நா எடுத்துள்ள நிலைப்பாட்டிற்கு சிறீலங்கா ஆதரவாம்!

கிழக்கு ஜெருசலேம் உட்பட பலஸ்தீனத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலைகள் குறித்து மனித உரிமை பேரவையில் நேற்று விசேட கூட்டம் கூட்டப்பட்டதை
வரவேற்பதாக சிறீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. அணிசேர அமைப்பின் சார்பில் ஈரான் ஊடாக விடுத்துள்ள அறிக்கையிலேயே இலங்கை அரசாங்கம் இதனை கூறியுள்ளது.
இது குறித்து சிறீலங்கா வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
காஸா அதிகரித்து வரும் வன்முறைகள் காரணமாக ஏற்பட்டுள்ள உயிர் அழிவுகள், சொத்து சேதங்கள், அங்கு ஏற்பட்டுள்ள துன்பமான நிலைமை குறித்து இலங்கை அரசாங்கம் கவலை கொண்டுள்ளது.வன்முறைகளில் குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாள் கடந்து செல்லும் போது அப்பாவிகளில் உயிர் இழப்புகளை காணமுடிகிறது.
வன்முறை மற்றும் பொதுமக்களின் இழப்புக்கு காரணமான அனைத்து தாக்குதல் நடவடிக்கைகளையும் சிறீலங்கா கண்டிக்கின்றது.அமைதியான முறையில் பேச்சுவார்த்தைகளை நடத்தி பிராந்தியத்தில் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும் என்ற எமது உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
பேச்சுவார்த்தை மூலமான தீர்வுக்கு சாத்தியமுள்ளது என்று இலங்கை நம்பிக்கை கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் சிறீலங்கா அரசாங்கம், பாலஸ்தீனத்தின் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை நடத்தி பொதுமக்களை கொன்று வரும் ஸ்ரேலை இதுவரை கண்டிக்கவோ, அந்த நாட்டின் மீது குற்றம் சுமத்தவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா ஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆதரவளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment