இலங்கை தமிழ் அரசியல் வரலாற்றினில் முக்கிய மாற்றமாக தமிழரசுக்கட்சியின்
தலைவராக தற்போதைய வடமாகாண முதல்வர் சீ.வி.விக்கினேஸ்வரனை நியமிக்க காய் நகர்த்தல்கள் ஆரம்பமாகியுள்ளது. இதற்கான முன்முயற்சிகளை தற்போதைய தலைவர் இரா.சம்பந்தன் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மூலம் ஆரம்பித்துள்ளார்.
இனிவருங்காலங்களினில் தான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லையென தெரிவித்துள்ள இரா.சம்பந்தன் தானே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேசிய தலைவராக செயற்படப்போவதாக அறிவித்துள்ளார். தற்போது தமிழரசு கட்சியின் தலைவராகவும் இருந்து கொண்டு கூட்டமைப்பின் தலைவராகவும் இருப்பதனால் ஏனைய பங்காளிக்கட்சிகளது விடயத்தினை கட்டுப்படுத்த முடியாதிருப்பதால் தமிழரசுக்கட்சி பதவியினை வடமாகாண முதல்வர் சீ.வி.விக்கினேஸ்வரனிற்கு வழங்க இரா.சம்பந்தன் திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இந்த நியமன விடயத்தினை கையாள நியமிக்கப்பட்டுள்ள சுமந்திரன் தற்போது வேகமாக காய்நகர்த்தல்களை செய்துவருவதுடன் சந்திப்புக்களையும் இரகசியமாக செய்துவருகின்றார்.எனினும் இம்முயற்சிக்கு மாவை.சேனாதிராசா ஒருபுறமும் மறுபுறம் பேராசிரியர் சிற்றம்பலம் அணி இன்னொரு புறமுமாக எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன.ஏற்கனவே வடக்கு முதலமைச்சர் கனவிலிருந்த மாவையினை டெல்லி மூலம் கையாண்டது போன்று இம்முறையும் சமாளித்துக்கொள்ளலாமென நம்பும் சம்பந்தன்-சுமந்திரன் கூட்டு பேராசிரியர் சிற்றம்பலம் அணி விவகாரத்தை கையாள திண்டாடி வருகின்றது.
அண்மைக்காலமாக சுமந்திரன் அடக்கி வாசிப்பதன் பின்னணியினில் இத்தகைய நகர்வுகளே உள்ளதாக கூறப்படுகின்றது.வடமாகாண சபையினில் அதிகாரங்கள் இல்லையெனவும் அழுத்தங்களினையடுத்து தனது பதவியினை இராஜினாமாச்செய்ய முற்பட்ட வடமாகாண முதல்வர் சீ.வி.விக்கினேஸ்வரனிற்கு தமிழரசுக்கட்சி தலைவர் பதவியெனும் துரப்பு சீட்டை வழங்கியே ராஜினாமா விடயத்திற்கு முடிவு கட்டப்பட்டதாக தெரியவருகின்றது.

No comments:
Post a Comment