July 25, 2014

யேர்மனியில் நடைபெற்ற கறுப்பு யூலை கவனயீர்ப்பு நிகழ்வுகள்

தமிழீழ மக்களின் மனங்களில், ஆறாத ரணமாய் பதிந்துபோய்விட்ட கறுப்புயூலையின் கொடும் நினைவுகள்
, வரலாற்று ஓட்டத்தில் 31 ஆண்டுகளை நினைவில் தொட்டுக் கொள்ளுகின்றது.
அந்த வகையில் கறுப்பு யூலை நினைவாக யேர்மனி , பேர்லின் , லண்டோ, கனோபர் ஆகிய நகரங்களில் , கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெற்றன . யேர்மன் மொழியில் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டு , ஈழத்தமிழர்களுக்கு நடக்கும் இன அழிப்பை பல்லின மக்களுக்கு பல்வேறு வடிவங்களில் தமிழ் இளையோர் அமைப்பினர் மிக சிறப்பாக எடுத்துரைத்தனர் .
யேர்மனி பேர்லின் நகரில் வெளிவிவகார அமைச்சுக்கு முன்பால் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றதோடு மனுவும் சென்றடையவைக்கப்பட்டது.
சிங்கள அரசின் இன அழிப்பின், அந்தக் கோரமும், இரத்தவாடையும் அந்த அவலக்காட்சிகளின் பதிவுகளும் இன்னமும் எம்மைச் சூழ்ந்தே உயிர்ப்போடு காணப்படுகின்றன.
அன்றைய நாட்களில் , சிங்களவர்கள் வாழும் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள், விரட்டி விரட்டி வேட்டையாடப்பட்டனர். துண்டாடப்பட்டனர். தீயில் உயிரோடு வீசப்பட்டனர். வாகனங்களோடு கொழுத்தப்பட்டனர். தாறுமாறாக விலங்குகள் போலத் தாக்கப்பட்டனர்.
ஈழத்தமிழர்களின் சொத்துக்கள் சில மணித்துளிகளில் முற்றாகக் கொள்ளையிடப்பட்டும், வீடுகள், கடைகள் எரிக்கப்பட்டன. கறுப்பு யூலையாய் இரத்தச் சிதறல்களுடன், மரண ஓலங்களுடன் 1983 யூலையில் பதிவாயிற்று.யாவும் சிங்கள அரசின் அங்கீகாரத்துடன் ஆசியுடன் நடைபெற்ற, வரலாற்றில் ஆழமாகப் பதிந்துவிட்ட இனஅழிப்பின் இரத்த சாட்சியங்கள்.
சிங்கள அரசின் நீதி நிர்வாகம், சட்டம் ஒழுங்கில், தமிழர்கள் பாதுகாப்பாய் வாழ்வதற்கு சாத்தியமே இல்லை என்ற செய்தியை பகிரங்கமாக உணர்த்தியது கறுப்பு யூலை.
அந்த நிலையையே முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது .
நில அபகரிப்புக்கள், சிறைப்படுகொலைகள், பௌத்தமத விஸ்தரிப்புக்கள், தமிழர்களின் சொத்து அபகரிப்பு என்பன அரசாங்கத்தால் பகிரங்கமாக இன்றும் மேற்கொள்ளப்படுகின்றன.
அந்த வகையில் சுதந்திர தமிழீழ தனியரசே மட்டுமே தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்தும் அதற்காக உழைப்பதே கறுப்பு யூலையை நினைவு கூறுவதின் அர்த்தமாக அமையமுடியும்.
எதிர்வரும் சனிக்கிழமை 26.07.2014 அன்று Frankfurt நகரிலும் கறுப்பு யூலை நினைவேந்தி கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.GarmainGarmain-01Garmain-02Garmain-03

No comments:

Post a Comment