July 24, 2014

குவைத்தில் இலங்கைப் பெண் கொலை

வைத் பிரஜை, தனது முன்னாள் மனைவியுடன் தொடர்புகொண்டு தமது பிரச்சினைகள் பற்றி கதைப்பதற்கு தனது வீட்டுக்கு வரும்படி அழைத்துள்ளார்.

குவைத், சல்மியா பகுதியிலுள்ள வீட்டில் இலங்கையரான தனது முன்னாள் மனைவியை குவைத் பிரஜையொருவர் தலையில் பலமுறை அடித்துக் கொலை செய்துள்ளதாக அராப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அப்போது இவர்களது உரையாடல் பெரும் தர்க்கமாக மாறி சந்தேகநபர் பெண்ணின் தலையில் பலமுறை அடிக்க, அப்பெண் மயங்கிவிட்டார்.
சந்தேகநபர் உள்நாட்டமைச்சின் நடவடிக்கை அறைக்கு விடயத்தைக் கூறி துணைமருத்துவர்களும், பாதுகாப்பு துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால், அவர்கள் பாதிக்கப்பட்டவரை சோதித்த போது அவர் இறந்து போயிருந்தார். அதனையடுத்து, அப்பெண்ணின் உடல் புலனாய்வு மருத்துவ திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதனையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டு சல்மியா பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
இன்னுமொரு சம்பவத்தில் பஹஹீல் இரண்டு இந்திய பிரஜைகள், அவர்களுள் ஒருவரின் இலங்கையரான மனைவியை கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அச்செய்தி சேவை மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment