July 24, 2014

கறுப்பு யூலை 1983ப்பற்றி தேசியத்தலைவர் கூறுகையில்!..

தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் நேரடிப் பங்கேற்புடன் 23.07.1983ம் நாள் திருநெல்வேலியில் ரோந்து வந்த சிறீலங்கா இராணும் மீது முதலாவது பெரும்
தாக்குதல் நடைபெறுகின்றது. மிக அதிர்சியூட்டக்கூடிய வகையில் உச்சமாக நடைபெற்ற இத்தாக்குதலில்  13 இராணுவததினர் கொல்லப்படுகின்றார்கள் ஆயுதங்களும் கைப்பற்றப்படுகின்றன. 
இதில் தலைவரின் நம்பிக்கைக்கு பாத்திரமான லெப். செல்லக்கிளி வீரச்சாவடைகின்றார். இந்த இழப்பை ஏற்க வலுவில்லாத சிங்கள அரசு பெரும் எடுப்பிலான இனக்கலவரத்தை கட்டவிழ்த்து விடுகின்றது. மறுநாளான 24ம் நாள் தமிழர் வாழ்வில் இருண்ட காலம் எனப்படும் கறுப்பு யூலையின் தொடக்க நாள் ஆனது. பல இடங்களிலும் ஆயிரக்கணக்கில் தமிழர் கொல்லப்பட்டனர். ஓடி ஒளிக்க இடமின்றி தேடி அழிக்கப்பட்டனர். தமிழ் அரசியல் கைதிகள் சிறைவைக்கப்பட்டிருந்த  வெலிக்கடைச்சிறையிலும் 25ம் நாள் பெரும் கொடுரம் நிகழ்ந்தது. சிறீலங்கா இராணுவத்தினரும் சிங்களக் காடையரும் இணைந்து இந்த அழிவுகளை நிகழ்த்தினர்.

இப்படியாக பாரிய திருப்பங்களை ஏற்படுத்திய 83 கரும் யூலை கலகம் பற்றிய தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் பார்வையை அறிந்திடுவோம்.

No comments:

Post a Comment