கலியாணத்தைக் குழப்பியதால் ஏற்பட்ட கோபம் – கடுமையாகத் தாக்கப்பட்டார் புறோக்கர் இரு கலியாணத் தரகர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து
முரண்பாட்டால் கலியாணம் குழப்பப்பட்டது. இதனால் ஒரு கலியாணப் புறோக்கர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் கடந்தவாரம் உரும்பிராய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஒரு கலியாணத் தரகர் தன்னிடம் இருந்த ஆணின் ஜாதகத்தை இன்னொரு கலியாணத்தரகருக்கு கொடுத்துள்ளார். அத் தரகர் அந்தக் குறிப்பை வைத்து சுன்னாகத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமணம் முடிக்க நிச்சயம் செய்துள்ளார். ஆனால் இந்த விடயத்தை மற்றைய கலியாணத் தரகருக்கு சொல்லாது மறைத்துள்ளார். அத்துடன் தான் மட்டும் புறோக்கர் காசை வாங்க திட்டமிட்டதாகத் தெரியவருகின்றது. இதை அறிந்த ஜாதகத்தைக் கொடுத்த தரகர் மற்றைய தரகரிடம் சென்று முரண்பட்டுள்ளார். இந்த முரண்பாட்டையடுத்து சில நாட்களின் பின் பெண் வீட்டார் கலியாணத்தைக் குழப்பியுள்ளனர்.
மாப்பிளை வீட்டார் காரணம் கேட்ட போது மாப்பிளை இன்னொரு பெண்ணைக் காதலித்து ஏமாற்றியதாக தெரிவித்துள்ளனர். இந்த விடயம் ஜாதகம் கொடுத்த தரகர் மூலமாகவே தெரியவந்ததாகக் கருதி மாப்பிளையின் அண்ணனும் மற்றைய புறோக்கரும் ஜாதகம் கொடுத்த தரகரைக் கடுமையாகத் தாக்கியாக தெரியவருகின்றது. தாக்குதலுக்கு உள்ளான புறோக்கர் பொலிசாரிடம் முறையிட்டுள்ளார்.
No comments:
Post a Comment