அவுஸ்திரேலியாவில் தற்கொலை செய்துக் கொண்ட ஈழு ஏதிலியான லியோ சீமான்பிள்ளையின் இறுதி கிரிகையில் பங்கேற்பதற்காக அவரது பெற்றோருக்கு வீசா
அனுமதி வழங்க வேண்டும் என்று, அவுஸ்திரேலிய செனட் சபை வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை ஒன்று செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக த கார்டியன் செய்தி வெளியிட்டிருக்கிறது.
தமிழ் நாட்டில் உள்ள சீமான்பிள்ளையின் பெற்றோருக்கு கடவுச் சீட்டு இல்லாத நிலையில் அவர்களுக்கு அவுஸ்திரேலியா வீசா வழங்க மறுக்கிறது.
ஆனால் சீமான் பிள்ளையின் சகோதரரிடம் கடவுச் சீட்டு இருக்கின்ற போதும், அவருக்கு நிதித் தகமை, கல்வித் தகமை, சொத்து என்பன இல்லாத நிலையில் அவருக்கு வீசா வழங்க முடியாது என்று இந்தியாவில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரம் கடிதம் அனுப்பி இருக்கிறது.
இந்த நிலையில் அவர்களுக்கு உடனடியாக வீசா வழங்குவதற்கான நடவடிக்கையை அவுஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களம் மேற்கொள்ள வேண்டும் என்று, அவுஸ்திரேலிய செனட் சபை வலியுறுத்தியுள்ளது.

No comments:
Post a Comment