தங்களின் கோரிக்கைக்கு அமைய, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பான வரைவுக்காக, 200க்கும் மேற்பட்ட யோசனைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசியல் தீர்வுக்கான வரைவு ஒன்றை தயாரிப்பதற்காக பொது மக்களிடம் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு யோசனைகளை கோரி இருந்தது.
இதன்படி உள்நாட்டில் இருந்தும் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த மக்களிடம் இருந்தும் இவ்வாறான யோசனைகள் கிடைக்கப் பெற்றவண்ணம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மாத இறுதி வரையில் இந்த யோசனைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் கையளிக்க முடியும்.
அவற்றை அடிப்படையாக கொண்டு, பகுப்பாய்வு செய்து, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கான வரைவு ஒன்றை உருவாக்கவிருப்பதாகவும் சுரேஷ் பிரேமசந்திரன் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment