May 25, 2014

தடைசெய்யப்பட்டோரின் சொத்துக்களை முடக்க கோத்தா திட்டம்

தடை செய்யப்பட்ட புலம்பெயர் தமிழர்களின் சொத்துக்கள் முடக்கப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது. சிறீலங்கா அரசாங்கத்தினால் 16 புலம்பெயர் தமிழ்
அமைப்புக்களும், 424 தனிநபர்களுக்கும் தடை விதித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையின் 1373 பிரகடனத்தின் அடிப்படையில் இந்த அமைப்புக்களும் தனிநபர்களும் தடை செய்யப்பட்டுள்ளது. சிறீலங்காப் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவின் கையொப்பத்தின் கீழ் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனங்களின் மற்றும் தனிப்பட்ட நபர்களின் சொத்துக்கள் முடக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மத்திய வங்கி மற்றும் ஏனைய வங்கிகளுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை முடக்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் மேலும் தெரிவிக்கப்படுகிறது. 

No comments:

Post a Comment