மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவை ராஜினாமா
செய்தது. இன்று சனிக்கிழமை மதியம் டெல்லியில் கூடிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கடைசி அமைச்சரவை கூட்டத்தில் இந்த ராஜினாமா முடிவு எடுக்கப்பட்டது. பிரதமர் பதவியை மன்மோகன் சிங்கும், அவரது அமைச்சரவை சகாக்களும் ராஜினாமா செய்துள்ளனர்.
இதற்கான ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்த மன்மோகன் சிங் கையளித்தார். இதேவேளை, நாளைமறுதினம் மே 19ஆம் தேதி டில்லியில் நடைபெறும் காங்கிரஸ் காரியக் குழு கூட்டத்தில், கட்சி பதவியில் இருந்து சோனியாவும் ராகுலும் பதவி விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அன்றைய தினமே பதவி விலகல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
No comments:
Post a Comment