May 25, 2014

நெருப்போடு விளையாடதே..பொசுங்கிப்போவாய்..முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்தின பல்கலைச்சமூகம்

நெருப்போடு விளையாடதே..பொசுங்கிப்போவாய்..முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்தின பல்கலைச்சமூகம் அந்த நடவடிக்கைக்கு வைச்ச இரகசியப்பெயர்
அதுதான்.உண்மைதான் துப்பாக்கி முனையினில் அடக்கப்பார்த்து தோற்றுப்போன யாழ்ப்பாண இராணுவத்தளபதி விழுந்தாலும் மீசையில மண் படவில்லையென்ற தோரணையில மக்களிற்கு அஞ்சலியெண்டதால தடுக்கவில்லையென்கிறார்.உண்மையில எவ்வளவு சமூகப்பொறுப்போட அந்த நினைவேந்தலை பொடியள் செய்தாங்கள் என்றது நேரில கண்டவைக்கு தான் தெரியும்.கைலாசபதி அரங்கத்தில அமைதியெண்டால் ஊசி விழுந்தால் சத்தம் கேட்கிற அமைதி.ஆமி சொல்லி பல்கலைக்கழகத்தை மூடின நிர்வாகத்திற்கு முகத்தில அடிச்ச மாதிரி தாங்களும் பகிஸ்கரிப்பெண்டு லீவு விட்டாங்கள்.பண்ணுறத பண்ணிப்பாருங்கோவெண்ட சவால் தான் பாருங்கோ.அதிலையும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தலைவரை நாலாம் மாடியில தடுத்து வைச்சால் எல்லாவற்றையும் தடுக்கலாமெண்டு அரசாங்கம் கண்ட கனவும் பொய்த்துப்போய்விட்டதே உண்மை.பொங்குதமிழ் நடத்தி உலகை திரும்பி பார்க்க வைத்த சமூகம் துவண்டு போகவிடக்கூடாது பாருங்கோ.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நினைவு கூருவதை ஆரும் தடுக்கேலாதெண்டு நிமிடத்துக்கு மூன்று தரம் பேசிக்கொண்டிருந்த மாவையர் இரவோட இரவாக அம்பாறைக்கு எஸ்கேப்.முதல் நாள் நடந்த கூட்டமைப்பு பத்திரிகை எம்பியின் விளையாட்டுப்போட்டியில எல்லோரும் தவறாமால் ஆஜராகியிருந்தவை.ஆனால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலெண்டதும் தான் ஆளாளுக்கு எஸ்கேப்.ஆலயங்களில நடந்த நினைவேந்தல்கள் எல்லாவற்றிலும் சிவாஜிலிங்கம் தான் முன்னுக்கு நின்றது.சிறிதரன் சத்தமில்லாமல் கிளிநொச்சியில நினைவேந்தலை நடத்திப்போட்டு யாழ்ப்பாணத்திலயும் நின்று மனிசன் பாடுபட்டது.அனந்தி பொம்பிளையாக தனிச்சு றோட்டில நின்று போராடினது.வவுனியா மற்றும் முல்லைதீவிலயும் நினைவேந்தலை சிறப்பாக செய்தவை.அப்ப ஏன் யாழப்பாணத்தில தடைகளை தாண்டி பொது இடமொன்றை எடுத்து நினைவேந்தலை கூட்டமைப்பால் செய்யமுடியாமல் போட்டுது.சனத்திட்ட இருக்கிற கேள்விக்கு அவையள் தான் பதில் சொல்லவேணும் பாருங்கோ.

எலெக்சன் காலங்களில் எங்கடை கூட்டமைப்புகார முள்ளிவாய்க்கால் தியாகம்இ இன அழிப்பு என்றெல்லாம் வீரம் கொப்பளிக்கபN;பசினது எல்லோருக்கும் தெரியும்.மாவீரர் துயிலுமில்லங்களை கட்டப்போறன் எண்டு வாக்கு கேட்ட சாவகச்சேரி தம்பி சயந்தன்  தான் மாகாணசபையில் எல்லோரும் சேர்ந்து ஒற்றுமையாக விளக்கேற்றவிடாமல் தடுத்ததாக கேள்வி.ஆள் தண்ணியில நவீன சகுனி வேசம் கட்டியிருக்கிறதாக தகவல்.16ம திகதி சிவாஜி,அனந்தி மற்றும் மேரிகமலா இணைந்து நடத்தின நினைவேந்தலை நையாண்டி பண்ணியதாகவும் கேள்வி.அத்தோட கடைசியாக பேரவை கூடிய வேளை பொதுவில எல்லோரும் சேர்ந்து விளக்கேற்றுகையில அதில முதலமைச்சர் மற்றும் அமைச்சேயில்லாத அமைச்சர்கள் வரை பங்குபற்றவிடாது குழப்பினது வரை தம்பியின்ர சாதனை தானாம்;.ஏற்கனவே தம்பி கொழும்பில அரசு பக்கம் பாயப்போறதாகவும் அதற்கு பேரம் பேசிறதாகவும் பேப்பர்காரர்கள் கிசுகிசுக்கினம்.இன்னொரு தேசியப்பட்டியல் எம்பி சுமந்திரனின் வாரிசு தயார் பாருங்கோ.

கூட்டமைப்புகாரர் போதைவஸ்து விக்கிறதாக பாராளுமன்றத்தில வைச்சு அரச அமைச்சர் டக்ளஸ் நாறடிச்சிருக்கிறார்.அதைச்சசொல்லிறதுக்கு அவருக்கு தகுதியிருக்கோ எண்டதிற்கு அப்பால் எல்லோரும் காட்டுற மௌனம் எங்கப்பன் குதிருக்குள்ள இல்லையென்ற கதையாக்கிடக்குது.எங்கட இளம் சமூகத்தை சீரழிக்கிற போதை பொருள் பயன்பாட்டை தடுக்கவேண்டிய கடமை எல்லோருக்குமிருக்கு.தெற்கு ஆட்சியாளர்கள் சத்தமில்லாமல் அதனை இளம் சமூத்திற்குள்ள புகுத்த பார்க்கினம்.தடுக்க வேண்டிய அரசியல் தலைமையில சிலது இப்பிடி குற்றஞ்சாட்டுகிற அளவுக்கு நிக்கேக்க என்னத்த சொல்லுறது.செல்வம் அடையத்தான் வேணும்..அதுக்காக முறைதவறி செல்வம் சேர்க்கேலாது பாருங்கோ.

மோடியின்ர பதவியேற்புக்கு கூட வாறியளோவெண்டு மஹிந்த ராசா கேட்க தாடி ஜயாவுக்கு அடிமனசில நப்பாசை தானாம்.ஆனால் தவறித்தானும் போனால் உவங்கள் பேப்பர்காரர் பாய்ஞ்சு விழுந்து பிறாண்டிப்போடுவங்கள் என்று கூட இருக்கிற ஆலோசகர்கள் சொல்லியருக்கினம்.ஏற்கனவே பேரவையில விளக்கேற்றுகையில ஆள் காருக்குள்ள ஒழிச்சிருந்த விடயம் கசிஞ்சு பேப்பர்காரர் போட்டு தாளிச்செடுத்துப்போட்டாங்கள்.அண்மைக்காலமாக சனத்திட்டையும் ஆதரவு படுவீழ்;ச்சியடையத்தொடங்கியிட்டுது.அதுகளை சீர்செய்யத்தான் உந்த விபரமான கடிதம் அனுப்பினதாம்.கடிதம் ஜீ.எல்.பிரீஸை போய்ச்சேர்ந்துதோ இல்லையோ பேப்பர்காரங்களிற்கு போயிட்டுதாம்.

No comments:

Post a Comment