May 4, 2014

மன்னார் முள்ளிக்குள வனப் பகுதியில் வாழும் மக்கள் தொடர்பில் முதலமைச்சருக்கு அறிக்கை தயாரிப்பு

மன்னார் முள்ளிக்குளம் பகுதியில் கடந்த ஐந்து வருடங்களாக சொந்த இடங்களில் குடியேற்றப்படாமல், வனப்பகுதிகளில் தற்காலிக குடில்களில் வாழ்ந்து வரும் மக்கள் தொடர்பில் வடமாகாண முதலமைச்சரிடம் அறிக்கை ஒன்று வழங்கப்படவுள்ளது.  

இந்த பகுதிக்கு நேற்றுமுன்தினம் நேரில் சென்று பார்வையிட்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் குழு ஒன்று இந்த அறிக்கையை தயாரிக்கிறது. 
முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 174 குடும்பங்கள் கடற்படையினரின் நில ஆக்கிரமிப்பின் காரணமாக, அவர்களின் சொந்த இடங்களில் இன்னும் குடியேற்றம் செய்யப்படாதுள்ளனர்.  

அவர்கள் இன்னும் அந்த பகுதியில் உள்ள காடு ஒன்றில் தற்காலிக கூடாரங்களை அமைத்து எந்த விதமான அடிப்படை வசதிகளும் இன்றி வாழ்ந்து வருகின்றனர்.  

இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட தரப்பினர் அவர்களை நேரில் சென்று சந்தித்து விபரங்களை பெற்றுக் கொண்டனர். 

No comments:

Post a Comment