கிளிநொச்சியினில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்கள் குடியிருப்புக்களை விடுவிக்க கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் மேற்கொள்ளப்படவுள்ள கண்டன ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 28 ம் திகதி புதன்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.முன்னணியின் கிளிநொச்சி அமைப்பாளர் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையினில் போராட்டம் புதன் கிழமைக்கு பிற்போடப்பட்டுள்ளது.நாளைய தினம் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடைபெறவுள்ள நிலையினில் பலரும் அதில் பங்கெடுக்கவுள்ளனர்.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்து இன்னமும் மீள் குடியமர அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நூற்றுக் கணக்கான குடும்பங்கள் அகதி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். ஆனால் கிளிநொச்சி உள்ளிட்ட அனைத்துப் பிரதேசங்களிலும் மீள் குடியமர்வு நிறைவடைந்துள்ளதாக அரசாங்கம் உண்மைக்குப் புறம்பான பிரசாரங்களை சர்வதேச சமூகத்தை நோக்கி செய்துவருகின்றதென தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.
ஏதிர்வரும் 26ம திகதி திங்கட்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பதாக நடத்தப்படவுள்ள எதிர்ப்பு போராட்டமொன்றிற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையினில் அக்கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் இணைந்து இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையினில் மேலும் தெரிவிக்கையினில் கிளிநொச்சியில் பரவிப்பாஞ்சான் உள்ளிட்ட பல பகுதிகளில் பொது மக்களது வீடுகளையும், பொது நிலையங்களையும் இராணுவம் ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ளதாகவும், அவற்றிலிருந்து வெளியேற இராணுவம் தொடர்;ச்சியாக மறுத்துவருவதாகவும் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மக்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் உள்ளுர் அரச அதிகாரிகள் மூலம் மக்களது சொந்த விருப்பங்களுக்கு மாறாக வேறு இடங்களில் குடியமர்த்துவதற்கான முற்சிகளிலும் அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளது என்றும் ஆனாலும் தமது சொந்த வீடுகளும் நிலங்களும் தம்மிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும், அதற்கு ஆவன செய்ய வேண்டுமாறும் முன்னணி கோரியுள்ளது.

No comments:
Post a Comment