இலங்கை அரசாங்கத்துடன் அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவு இணைந்து செயற்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.கடந்த கால
அரசாங்கங்களின் போது சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு பிரவேசித்து புகலிடம் பெற்றுக்கொண்டவர்களையும் நாடு கடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற பாதுகாப்புக் கூட்டமொன்றில் அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிஸனுக்கும், இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
போலி புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்துவதற்கு அவுஸ்திரேலியா திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அரசாங்கத்துடன் அவுஸ்திரேலியா அரசாங்கம் இது தொடர்பில் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் அவுஸ்திரேலியாவில் போலியான முறையில் புகலிடம் பெற்றுக்கொண்டவர்களை நாடு கடத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment