April 20, 2014

வீடுகளைத் திருத்தம் செய்தமைக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை புதுக்குடியிருப்பு மக்கள் கவலை!

யுத்தத்தால் பெரும் சேதமடைந்த முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் மீள்குடியேறிய பொதுமக்கள் வீடுகளைப்
புனரமைத்தமைக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை. இதனால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
சிறிலங்கா அரசாங்கத்தால் வன்னியில் மேற்கொள்ளப்பட்ட இறுதியுத்தத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் மீள் குடியேறியவர்களில் குறிப்பிட்டளவான குடும்பங்கள் சேதமடைந்திருந்த தங்களுடைய வீடுகளை வங்கிக்கடன் பெற்று திருத்தம் செய்தனர்.
இவ்வாறு வீடுகள் சேதமடைந்த குடும்பங்களுக்கு திருத்தத்திற்கான நிதியுதவி வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்ட நிலையில் புதுக்குடியிருப்பில் அந்த உதவி வழங்கப்படாமையால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சில இடங்களில் பகுதியாகச் சேதமடைந்த வீடுகளை மீள் புனரமைப்புச் செய்வதற்கும் பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்கள் உதவிகளை வழங்குகின்றன. இந்த நிலையில் பகுதியாகச் சேதடைந்த வீடுகளைத் தாமாகப் புனரமைத்த சுமார் 29 பயனாளிகள் குறித்த எந்த வீட்டுத்திட்ட பட்டியலுக்குள் உள்வாங்கப்படவில்லை தெரிவித்துள்ள மேற்படி குடும்பங்கள் தங்களையும் வீட்டுத்திட்டப் பயனாளிகள் பட்டியலில் உள்வாங்கி பகுதி திருத்த கொடுப்பனவை  பெற்றுத் தர உரிய அதிகாரிகள் நடடிவக்கை எடுக்கவேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment