April 20, 2014

வேலை வாய்ப்பு இன்றி வடக்கில் 1420 பட்டதாரிகள்!

வடக்கில் உயர் தேசிய டிப்ளோமா பட்டதாரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தில் இருந்து கடந்த இரண்டு வருடத்தில் வெளியேறிய பட்டதாரிகள் உட்பட 1420
பட்டதாரிகள் வேலை வாய்ப்பற்ற நிலையில் உள்ளனர்.
நாடளாவிய ரீதியில் 41 ஆயிரத்து 500 பட்டதாரிகளுக்கு 138 அரசாங்க திணைக்களங்களில் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
வடக்கில் உயர் தேசிய டிப்ளோமா பட்டதாரிகளின் நியமனம் தொடர்பாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
எனினும், நீதிமன்றில் இவ்விடயம் உள்ளதால் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையும் உயர் தேசிய கணக்கியல் ,முகாமைத்துவம் ,வர்த்தகம் தொடர்பான டிப்ளோமா பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கலில் தாமதம் ஏற்படலாம் என தெரிய வருகின்றது.
இதே வேளை , வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த அரசாங்க அதிபர்கள் வடக்கில் வேலையற்று இருக்கும் பட்டதாரிகள் ,உயர் தேசிய டிப்ளோமா பட்டதாரிகள், பட்டதாரி நியமனத்தின் கீழ் பயிலுநர்களாக உள்ளவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment