April 23, 2014

மோடியோடு லேடியை ஒப்பிட முடியாது - வைகோ கடும் தாக்கு!

கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி, எனது தேர்தல் பிரச்சாரப் பயணத்தை மதுரை
சிலைமான் பகுதியில் இருந்து ஆருயிர்ச் சகோதரர் பூமிநாதன் தொடங்கி வைத்தார். 31 நாள்களுக்குப் பிறகு, இன்றைக்கு சின்னசெல்லம் குடியிருக்கின்ற இந்த ஜெய்ஹிந்த்புரத்தில் நிறைவு செய்கிறேன்.
நடைபெற இருக்கின்ற 16 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில், நான்மாடக்கூடலில், மதுரை நாடாளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி, என் இனிய சகோதரர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் வேட்பாளராக, நாளை நாடாளப் போகின்ற நமது பிரதமர் நரேந்திர மோடி ஆதரவு பெற்ற வேட்பாளராக, சமூக நீதிக் காவலர் ஐயா டாக்டர் இராமதாÞ அவர்களுடைய பாட்டாளி மக்கள் கட்சி, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி, ஈÞவரனின் கொங்கு மக்கள் தேசிய கட்சி, ஏ.சி. சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி, தமிழருவி மணியன் அவர்களுடைய காந்திய மக்கள் கட்சி, இளையரசுவின் வல்லரசு பிரிவு பார்வர்டு பிளாக் கட்சி, புரட்சிக் கவிதாசனின் தேவேந்திர குல மக்களின் அமைப்பான மக்கள் தமிழகம், நாகை திருவள்ளுவனின் தமிழ்ப்புலிகள் கட்சி, நடிகர் விஜய் ரசிகர் மன்றம், திராவிட முன்னேற்றக் கழகத்தில் நீதி கேட்கும் அருமைச்சகோதரர் மு.க.அழகிரி அவர்களின் தீரம்மிக்க படைவீரர்களின் ஆதரவு பெற்ற வேட்பாளராக நடுநிலையாளர்களின் ஆதரவு பெற்ற வேட்பாளராக, மாறுதலை ஏற்படுத்தப் போகின்ற புதிய வாக்காளர்களின் மகத்தான ஆதரவைப் பெற்ற வேட்பாளராக, முரசு சின்னத்தில் போட்டியிடுகின்ற அன்புச் சகோதரர் சிவ. முத்துக்குமார் எம்.ஏ. அவர்களுக்கு, வாக்குகள் சேகரிக்கின்ற பொதுக்கூட்டமாக தேர்தல் பிரச்சாரத்தின் நிறைவுக் கூட்டமாக, பெயரிலேயே வெற்றியைத் தாங்கி இருக்கின்ற இந்த ஜெய்ஹிந்த்புரத்தில் நடைபெறுகின்ற இந்தக் கூட்டத்தில், பல்லாயிரக்கணக்கில் திரண்டு இருக்கின்ற தமிழ்ப் பெருமக்களே,
பசி நோக்காது கண் துஞ்சாது மெய்வருத்தம் பாராது கடந்த ஒரு மாத காலமாக அயராத உழைப்பினைத் தந்து இருக்கின்ற பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் ஆற்றல்மிகு செயல்வீரர்களே, இல்லங்களில் இருந்து என் பேச்சைச் செவிமடுத்துக் கொண்டு இருக்கின்ற எனது அன்பிற்குரிய தாய்மார்களே, எனது பாசத்திற்குரிய சகோதரிகளே, வீர வாலிபச் சிங்கங்களே, முதன்முதலாக வாக்கு அளிக்கப் போகின்ற, திருமணத்தன்று எப்படிப் புது மாப்பிள்ளையும், பெண்ணும் பலவிதமான கற்பனைகளில் இருப்பார்களோ, அதைப்போல நாளை மறுநாள் வாக்குச்சாவடிக்குப் போகின்ற பரபரப்பில் இருக்கின்ற, காஷ்மீரம் முதல் கன்னியாகுமரி வரை நரேந்திர மோடி அலை வீசுகிறது என்ற உணர்வை, ஒவ்வொரு வீட்டிலும் இருக்கின்ற தாயிடம் தந்தையிடம், அண்ணனிடம் அக்காவிடம் ஏற்படுத்தி இருக்கின்ற புதிய வாக்காளர்களே,
தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெற்றி முரசு கொட்டப்போகின்ற என் அன்புத் தம்பிமார்களே, அன்புத் தங்கைகளே, மிக ஆவலோடு பேனாவைத் தீட்டிக் கொண்டு இருக்கின்ற செய்தியாளர்களே, நேரடியாகவே ஒளிபரப்புச் செய்து கொண்டு இருக்கின்ற இமயம், கேப்டன், மக்கள் போன்ற தொலைக்காட்சிகளின் ஒளிப்பதிவாளர்களே, இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவதற்கு ஒத்துழைத்த காவல்துறை நண்பர்களே வணக்கம்.
இந்த நிறைவுப் பிரச்சாத்தில் நிறையச் செய்திகளை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதால், நான் போட்டியிடுகின்ற தொகுதியில் ஐந்து நிமிடங்கள் மட்டுமே பேசி விட்டு வந்து இருக்கின்றேன்.
எதிரிகள் கலக்கம்
இந்தத் தேர்தலில் நமது அணி பலமாக அமைய வேண்டும் என்று நான் விரும்பினேன். அமைந்து விட்டது. அதனால் திகில் அடைந்து கிடக்கின்றது தி.மு.க. தலைமை, அண்ணா தி.மு.க. தலைமை. அஞ்சி நடுங்கிக் கொண்டு இருக்கின்றார்கள். நான் ஒரு தொகுதியில் வேட்பாளராக இருந்தும்கூட, எங்கள் இயக்கம் போட்டியிடுகின்ற தொகுதிகள் மட்டும் அல்லாமல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, நாகர்கோவில், பெரம்பலூர், திருச்சி ஆகிய தொகுதிகளுக்குச் சென்று பிரச்சாரம் செய்து விட்டு வந்தேன். இன்றைக்குப் பிரச்சாரத்தின் கடைசி நாள். என்னுடைய விருதுநகர் தொகுதியில்தானே பிரச்சாரம் செய்து இருக்க வேண்டும்? இல்லை. நான் தன்னலம் அற்றவன். இந்தக் கூட்டணியின் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற வேண்டும்; அதற்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன்.
நேற்று நள்ளிரவில் கலிங்கப்பட்டிக்குப் போய்ச் சேர்ந்தேன். இன்று காலையில் பொழுது புலர்ந்ததும், என் தாயின் காலில் விழுந்து வணங்கினேன். அவரது வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டு புறப்பட்டேன். அது என் வழக்கம். தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் அருமைச் சகோதரர் சதன் திருமலைக்குமார் அவர்களுக்காக திருவேங்கடம், வெள்ளாகுளம், புதுப்பட்டி, குருஞ்சாக்குளம், குருவிகுளம், ஆலங்குளம் ஆகிய இடங்களில் பேசிவிட்டு, சென்று வா, வென்று வா என்று அவரை வழி அனுப்பி வைத்தேன்.
அடுத்து தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் அருமைச் சகோதரர் ஜோயலுக்காக கழுகுமலை, நாலாட்டின்புத்தூர், கோவில்பட்டி லெட்சுமி நூற்பு ஆலை, தேவர் சிலை ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்தேன். கோவில்பட்டியில் என் வாழ்நாளில் பார்க்காத அளவிற்கு எழுச்சியாகத் திரண்டு இருந்த பல்லாயிரக்கணக்கான மக்களிடம் பேசிவிட்டு வந்தேன்.
பிற்பகலில் விருதுநகரில் இருந்து புறப்பட்டு, திருமங்கலம் தேவர் சிலை அருகில் பத்து நிமிடங்கள் , அடுத்து அறுபடை வீடுகளுள் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் ஐந்து நிமிடங்கள் பேசிவிட்டு, இந்தப் பிரச்சாரப் பயணத்தை தே.மு.தி.க. வேட்பாளருக்காகப் பேசி நிறைவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு இங்கே வந்து இருக்கின்றேன். இதுதான் என்னுடைய இயல்பு. கழகத் தோழர்களுக்கு இன்று ஒருநாள் முழுவதும் விருதுநகரில் பிரச்சாரம் செய்து இருக்கலாமே என்று வருத்தம். நம்பியவர்களுக்காகத் தலை கொடுப்பது எங்கள் வழக்கம். (பலத்த கைதட்டல்).
இன்று மாலை ஆறு மணிக்கு மேல் பேசக்கூடாது என்பது விதி. எனவே நான் பேச மாட்டேன். ஆனால், கலைஞர் கருணாநிதி எந்த விதியையும் கடைபிடிக்க மாட்டார். திருவாரூரில் பத்தரை மணி வரையிலும் பேசி இருக்கின்றார். காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை, இரவு பத்து மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவு போட்டு இருக்கின்றது. ஆனால், கலைஞர் கருணாநிதி, இந்தத் தேர்தலில் மட்டும் அல்ல; கடந்த தேர்தலிலும் இப்படிப் பேசி இருக்கின்றார்.
பேசினால் என்ன செய்து விடுவார்கள்? தேர்தல் செல்லாது என்றுசொல்லிவிடுவார்களா? என்ற எண்ணம்தான் காரணம். அதிகாரத்தில் இருந்த ஆணவம்தான் காரணம். நான் எழுமலைக்குப் போவதற்கு ஐந்து நிமிடங்கள் இருந்தன. அங்கே போய்ச் சேருவதற்குள் நேரம் முடிந்துவிடும். அங்கே ஐயாயிரம் பேர் திரண்டு இருந்தார்கள். நீங்கள் வந்து கும்பிட்டு விட்டு வந்தால் போதும் என்றார்கள். அதுவும் பிரச்சாரம்தான் என்று கருதி நான் அங்கு போகவில்லை. வண்டியைத் திருப்பி விட்டேன். நான் வரவில்லையே என்று எல்லோருக்கும் வருத்தம். மாவட்டச் செயலாளருக்கு, கழகத் தோழர்களுக்கு எல்லாம் வருத்தம். அவர்களுக்காக, மறுநாள் காலையில் வருகிறேன் என்று சொல்லிவிட்டு, விருதுநகரில் காலைப் பணிகளை முடித்துக்கொண்டு புறப்பட்டு, உச்சிவெயிலில் எழுமலைக்குப் போய்ப் பேசிவிட்டு வந்தேன். அதேபோலத் தாயில்பட்டியை நெருங்கும்போது 9.55 ஆகி விட்டது. அங்கே எட்டாயிரம் பேர் காத்து இருந்தார்கள். ஆனால், நான் திரும்பிப் போய்விட்டேன். ஜனநாயகத்தை மதிப்பவர்கள் நாங்கள். கலைஞருக்கு ஜனநாயகத்தைப் பற்றியோ, விதிகளைப் பற்றியோ எந்தக் கவலையும் கிடையாது.
முல்லைப்பெரியாறு
நம்முடைய கேரளத்துச் சகோதரர்களான செய்தியாளர்கள் பலர் இங்கே வந்து இருக்கின்றார்கள். நான் உங்கள் யாரையும் எதிரிகளாகக் கருதவில்லை. நாம் அனைவருமே சகோதரர்கள். கேரளம், ஆந்திரம், கர்நாடகம், துளு யாராக இருக்கட்டும், மூலம் தமிழகம்தான், தமிழ்தான். இந்தத் தமிழில் இருந்துதான் கிளைத்து எழுந்தன திராவிட மொழிகள் என்று மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை பாடினார். ஆனால், அந்தச்சகோதரர்கள் இன்று நம் தலையில் பாறாங்கல்லைப் போட்டு அழிக்க நினைக்கின்றபோது, நான் வெகுண்டு எழுந்தேன்.
முல்லைப்பெரியாறு அணைக்கட்டுப் பகுதியில் நீண்ட காலமாக நீர்மட்டம் உயர்த்தப்படாததால், உச்சநீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்தாததால், அங்கே பல பணக்காரர்கள் சுற்றுலா விடுதிகளைக் கட்டி விட்டார்கள். ஐந்து நட்சத்திர விடுதிகள், பொழுதுபோக்கு மையங்களைக் கட்டி இருக்கின்றார்கள் கோடீசுவரர்கள். இப்போது அணையின் நீர்மட்டத்தை உயர்த்தினால், அவை எல்லாம் மூழ்கிப் போகும். ஆகவேதான், அவர்கள்தான் அணையை உடைக்க வேண்டும் என்ற திட்டத்தை வகுத்து இருக்கின்றார்கள். அதற்காக, அணை உடைந்தால் இலட்சக்கணக்கானவர்கள் மடிந்து போவார்கள் என்ற பொய்யான தகவலை, அவ்தார் படம் எடுத்ததுபோல, கிராபிக்Þ காட்சிகளாக ஆக்கி, ஐந்து இலட்சம் குறுவட்டுகளில் பதிந்து பரப்பினார்கள். முதல் அமைச்சருடைய இணையதளத்திலேயே ஒளிபரப்பினார்கள்.
அந்தப் பணக்காரர்களிடம் இருந்து என்னைத் தோற்கடிப்பதற்காகப் பணம் வந்து இருப்பதாக குமுதம் ரிப்போர்ட்டர் ஏடு எழுதியது. அது எனக்கு ஆதரவான ஏடு அல்ல. என்னைக் கடுமையாக நிந்திக்கின்ற ஏடு; என் முதுகில் குத்தியவர்களைத் தூக்கிப் பிடிக்கின்ற ஏடு. அவர்கள் எழுதி இருக்கின்றார்கள். வைகோ மட்டும் அல்ல, தேனி தொகுதியில் அழகுசுந்தரம், தென்காசியில் சதன் திருமலைக்குமார், தூத்துக்குடியில் ஜோயல் என இந்த நான்கு தொகுதிகளிலும் போட்டியிடுகின்ற மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் வேட்பாளர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்று திட்டம் வகுத்து இருப்பதாக எழுதி இருக்கின்றார்கள். நான் சொல்லவில்லை.
இன்னொரு பக்கத்தில், தமிழக அரசியல் ஏட்டில் புகழேந்தி தங்கராஜ் ஒரு கட்டுரை எழுதி இருக்கின்றார். இலங்கை அரசு ஆதரவு பெற்றவர்தான் விருதுநகரில் போட்டியிடுகின்ற தி.மு.க. வேட்பாளர் என்று ஆதாரங்களோடு எழுதி இருக்கின்றார். அதனால் அந்தத் தமிழக அரசியல் ஏட்டினைப் பல இடங்களில் நேற்றைக்குத் தி.மு.கழகத்தினர் எரித்து இருக்கின்றார்கள். அந்த வேட்பாளருக்குப் புரோக்கர் வேலை பார்ப்பவர் யார்? அன்றைக்குத் தி.மு.க.காரனை வெட்டு குத்து கொல்லு என்று ஏவி விட்ட முன்னாள் அமைச்சர்தான் சொல்லுகிறார்.
லெனின் கொள்கையை மறந்த மார்க்சிÞடுகள்
இந்த மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகின்ற நமது வேட்பாளர் சிவ. முத்துகுமார், மதுரை மாநகர் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயலாளர். இந்த நாள் உலகம் போற்றுகின்ற மாமேதை லெனின் பிறந்தநாள். 1870 ஆம் ஆண்டு, இதே ஏப்ரல் 22 ஆம் நாள் அவர் பிறந்தார். இன்றைய மார்க்சிÞடுகள் லெனின் கொள்கையை மறந்து எவ்வளவோ நாள்கள் ஆயிற்று. இல்லாவிட்டால், சுதந்திரத் தமிழ் ஈழத்தை எதிர்ப்பார்களா? தமிழ் ஈழத்தை எதிர்க்கின்ற எவராக இருந்தாலும் அவர்கள் திரிபுவாதிகள்தான் என்று சொல்லுவேன்.
சுபைhவ வடி ளநடக னநவநசஅiயேவiடிn என்று சொன்னாhரே லெனின், அது மறந்து போய்விட்டதா உங்களுக்கு? உங்களது பாசம் தோழர் அச்சுதானந்தன் மீதுதானே தவிர, இந்த மதுரை மாநகர் மக்கள் மீது அல்ல. முல்லைப்பெரியாறுக்கு ஆபத்து, பென்னி குயிக் கட்டிய அணையை உடைக்க முயல்கின்றார்களே, உங்கள் நிலைப்பாடு என்ன? அணையை உடைத்தால் ஐந்து மாவட்டங்களில் பாசனத்துக்கு நீர் இன்றி, ஏன் குடிநீர் இன்றி அழிந்து போகுமே?
வைகையில் வெள்ளம் வந்தபோது, கரை கட்ட முயன்றான் மன்னன். வந்தி கொடுத்த புட்டுக்காக மண் அள்ளிப் போட வந்தான் இறைவன். வந்த வேலையைச் செய்யாமல் ஆற்று நீரில் துள்ளிக்குதித்து விளையாடிக் கொண்டு இருந்ததால், அவனது முதுகில் பிரம்பால் அடித்தான் மன்னன். அந்த அடி அனைவர் முதுகிலும் விழுந்தது என்ற திருவிளையாடற் புராணம் கூறுகின்றதே, அத்தகைய வெள்ளம் பாய்ந்து ஓடிய வைகையில் குடிக்கத்தண்ணீர் இல்லாமல் போகுமே? பிறகு நாம் வாழ முடியாதே.
உலகத்தின் மூத்த குடிமக்கள் வாழ்கின்ற மண் இது. திருவள்ளுவரும், தொல்காப்பியரும் வாழ்ந்த மண். அறநூல்களைத் தந்த மண். இந்த மண்ணில் பிறக்கின்ற பேறு பெற்றேன் நான். என் கடமையை இந்த மண்ணுக்குச் செய்கிறேன். நான் ஒரு வேலைக்காரன் ஊழியக்காரன். என் உயிர் இருக்கின்ற வரையில், தொண்டைக்குழியில் ஜீவன் இருக்கின்றவரையில், இந்த மண்ணில் வாழ்கின்ற மக்களுக்குத் தொண்டு ஆற்றுவேன். அதனால்தான் முல்லைப்பெரியாறு அணை காக்கப் போராடுகிறேன். முக்குலத்தில் பிறந்த வீரத்தம்பி ஜெயப்பிரகாஷ் நாராயண், தமிழ் இனம் காக்க வந்த வீரக் கேடயம் என்று எனக்கு வாழ்த்துப் பத்திரம் எழுதி வைத்து விட்டு, தன் உடம்பில் பெட்ரோiலை ஊற்றிக்கொண்டு தீக்குளித்து மடிந்து போனான். தேவேந்திர குல வேளாளர் சமூகத்தில் பிறந்த இடிமுழக்கம் சேகர் தன் உயிர் கொடுத்தான் முல்லைப்பெரியாறு அணை காக்க. விÞவகர்மா சமூகத்தில் பிறந்த இராமமூர்த்தி தன் உயிர் கொடுத்தான். ஆனால், மார்க்சிÞட் தோழர்களே, உங்களுடைய நிலைப்பாடு என்ன? அச்சுதானந்தனுக்கு லாலி பாடிக்கொண்டு இருக்கின்றீர்கள். இனியும் உங்களைப் பற்றிப் பேசி என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.
கலைஞர் கருணாநிதி அவர்களே, நீங்கள் முதல் அமைச்சராக இருந்தபோது, முல்லைப்பெரியாறு வழக்கில் 33 வாய்தா வாங்கியது கேரளம். ஒருமுறையாவது தமிழக அரசு வழக்கறிஞர், வாய்தா கொடுக்காதீர்கள் என்று எதிர்த்தாரா? இல்லை, இல்லை, கிடையாது. கடைசியாக மூன்று நீதிபதிகள் நமக்குச் சாதகமாகத் தீர்ப்பு கொடுக்க இருந்த நேரத்தில், கேரளத்துக்காரர்கள் நரித்தந்திரத்தோடு வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்பதற்காக, ஐந்து நீதிபதிகள் பெஞ்சுக்கு வழக்கை மாற்ற வேண்டும் என்று கோரினார்கள்.
நரித்தந்திரம் என்று சொல்லுவதால் வருத்தப்படக் கூடாது. தென்னை மரப் பிரச்சினைக்காக பிரதமர் வாஜ்பாயிடம் கோரிக்கை வைக்க வேண்டும் என்றபோது, கேரளத்தின் 20 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டார்கள். காங்கிரÞ, கம்யூனிÞட் என்ற வேறுபாடு கிடையாது. அனைவரும் என்னிடம் வந்தார்கள். வைகோ, நீங்களும் எங்களோடு வர வேண்டும்; பிரதமரிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று கேட்டபோது, நான் மறுக்கவில்லை. அவர்கள் இருபது பேர்களோடு நானும் ஒருவன் சேர்ந்து 21 பேர்களாகச் சென்று பிரதமரைச் சந்தித்தோம். அவர்கள் பிழைக்கத் தெரிந்தவர்கள். இந்த வழக்கை அரசியல் சட்ட பெஞ்சுக்கு மாற்ற வேண்டும் என்று கோரினார்கள். நீதிபதிகள், தமிழ்நாடு அரசு வழக்குரைஞர் என்ன சொல்லுகிறார்? என்று கேட்டார்.
தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் பராசரன், இல்லையில்லை வழக்கை நடத்தி முடித்தாக விட்டது; இங்கேயே முடித்துக் கொள்வோம் என்றார்.
உணவு இடைவேளை வந்தது. முதல் அமைச்சரிடம் கேட்கிறார். கலைஞர் சொல்லுகிறார்; அப்படியே ஒத்துக்கொள். வழக்கு இழுத்துக்கொண்டு போகட்டும் என்று சொல்லுகிறார். அதன்படி பிற்பகலில் நீதிமன்றத்திற்கு வந்த தமிழக அரசு வழக்குரைஞர், ஐந்து நீதிபதிகள் பெஞ்சுக்கு வழக்கை மாற்றுவதை ஒப்புக்கொண்டு எழுதிக் கொடுத்தார். வழக்கு அரசியல் சட்ட பெஞ்சுக்குப் போய்விட்டது. அந்த வழக்கு இங்கேயே முடிந்து இருந்தால், நமக்குச் சாதமாகத் தீர்ப்பு வந்து இருக்கும். அதை எதிர்த்து அவர்கள் மேல் முறையீட்டுக்குப் போயிருப்பார்கள். நமக்கு ÞடேடÞ குவோ கிடைத்து இருக்கும். கிடைத்த நீதியை இழந்ததற்குக் காரணம் கருணாநிதி.
கலைஞர் கருணாநிதி அவர்களே, நீங்கள் அண்ணாவின் தம்பியா? தமிழகத்திற்குச் செய்த துரோகம் அல்லவா? பெரியார் பெயரைச் சொல்லும் தகுதி உண்டா? அண்ணா பெயரைச்சொல்ல அருகதை உண்டா?
சரி இந்த வழக்கில் நம்முடைய லேடி எப்படி? அவர் ஒரு பயங்கரமான லேடி. (பலத்த சிரிப்பு). இந்த லேடி மோடியோடு மோதுகிறாராம். ஏங்க அவரோடு மோதுகிறீர்கள்? நான் ரொம்பச் சாதாரணமானவன். இரண்டு கேள்விகள் கேட்கிறேன். பதில் சொல்லுங்கள் பார்ப்போம். நான் ரொம்பச் சின்னவன், நீங்கள் ரொம்பப் பலமான லேடி. நீங்கள் முதல் அமைச்சராக இருந்தபோது, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்திக் கொள்ளலாம் என்று தீர்ப்பு வந்ததே, உடனே நீங்கள் ஏன் உயர்த்தவில்லை? உயர்த்தி இருந்தால் நமக்கு Þடேட்டÞ குவோ கிடைத்து இருக்குமே? ஏன் செய்யவில்லை? நீங்கள் பென்னி குயிக்குக்கு சிலை வைக்கின்றீர்கள்.
நாங்கள் உழுது பாடுபட்டு விதைத்து, நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டு, உரம் இட்டுக் களை பறித்து, பூச்சிகள் தாக்கி விடாமல் பாதுகாத்து, புதுமணப் பெண் போல் நெற்கதிர்கள் தலைசாய்ந்து நிற்பதைப் பார்த்து மகிழ்ந்து, அறுவடைக்கு நாள் குறித்த நேரத்தில், இரவோடு இரவாக வந்து அறுத்துக் களவாடிக்கொண்டு போகின்ற வேலையை, ஜெயலலிதா நீண்ட நாள்களாகச் செய்து கொண்டு இருக்கின்றார்.
நானும் கம்பம் அப்பாசும் ஊர் ஊராகப் போய் மக்களைத் திரட்டினோம். இந்த மதுரையில் மட்டும் மூன்று முறை உண்ணாவிரதம் இருந்தேன். ஐந்து முறை மறியல் செய்து இருக்கின்றோம். நடைபயணம் நடந்தேன். நான் குற்றம் சாட்டுகிறேன். முல்லைப்பெரியாறு பிரச்சினையில் கலைஞர் துரோகம் செய்தார்; நீங்களும் துரோகம் செய்து இருக்கின்றீர்கள்.
இரண்டு கட்சிகளின் தொண்டர்களும் அருமையான தொண்டர்கள். கட்சித்தலைமையைக் கடவுளாகக் கருதுபவர்கள். ஆனால், அந்தத் தலைமைகள் இரண்டும், நாட்டை, இனத்தைப் பாழ்படுத்தி விட்டன. இவர்கள் பிடியில் இருந்து எப்போது விடுதலை பெறுவோம்? என்று தமிழக மக்கள் ஏங்கித் தவித்தார்கள். சமய சஞ்சீவியாக நரேந்திர மோடி வந்து சேர்ந்து இருக்கின்றார்.
முன்பெல்லாம் என்ன செய்தார்கள்? தி.மு.க. பிடிக்கவில்லையா, கருணாநிதி பிடிக்கவில்லையா, அண்ணா தி.மு.க.வுக்குப் போடுவோம். வைகோ நல்ல மனுசன்தான். ஆனால் ஜெயிக்க முடியாதே. சரி ஜெயலலிதா பிடிக்கவில்லையா, கருணாநிதிக்குப் போடுவோம் என்று முடிவு எடுத்தார்கள். வைகோ நல்ல மனுசன்தான், ஆனால் ராசி இல்லாதவர் என்று நினைத்தார்கள். இப்படித்தான் 1972 இல் இருந்து மாறிமாறி கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டு இருந்தார்கள். இப்போது அதற்கு ஆப்பு வைத்து விட்டார் நரேந்திர மோடி. நமது அணி பலமாக அமைந்து விட்டது.
அதனால் எரிச்சல்பட்டு முதல் அமைச்சர் ஜெயலலிதா நம்மை எல்லாம் உதிரிக் கட்சிகள்; இவர்களுக்குக் கொள்கையே கிடையாது என்று பேசி இருக்கின்றார். முதல் அமைச்சர் அவர்களே வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். உங்கள் கொள்கை என்ன? கொள்ளை அடிப்பதுதான் உங்கள் கொள்கையா?
இப்படித்தான் டாக்டர் நாவலர் அவர்களைப் பார்த்து, தலையில் இருந்து உதிர்ந்த மயிர் என்றீர்கள். உங்களிடம் என்ன பண்பாடு இருக்கின்றது? நாங்கள் எல்லோரும் நாட்டுக்காக இரத்தம் சிந்தக் கூடியவர்கள். என்னுடைய ஒவ்வொரு தொண்டனும் உயிரைக் கொடுப்பான். எங்களைப் பார்த்து உதிரிக் கட்சி என்கிறீர்களே, இல்லை; நாங்கள் உறுதியான கட்சிகள். காலப்போக்கில் நீங்கள்தான் உதிரிக் கட்சியாகி இருக்கின்ற இடம் தெரியாமல் போகப் போகின்றீர்கள். (கைதட்டல்).
கலைஞர் வேண்டுமானால் உங்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் சும்மா இருக்கலாம். காரணம் உங்களைவிடத் தவறுகள் செய்தவர் அவர். எங்கள் வாழ்க்கை திறந்த புத்தகம். எங்களைப் பார்த்துக் கறை படிந்தவர்கள் என்று யாரும் குற்றம் சொல்ல முடியாது.
காயிதேமில்லத் சொன்னது என்ன?
இந்த மாநகரத்தில் வாழ்கின்ற இÞலாமிய சகோதரர்களுக்கும், கிறித்தவப் பெருமக்களுக்கும் ஒன்றைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நாங்கள் மதச்சார்பு அற்ற கொள்கையில் உறுதியாக இருக்கின்றோம். இந்தக் கூட்டத்தின் வாயிலாக இந்தியா முழுமையும் வாழ்கின்ற இÞலாமிய சமூகத்தினருக்கு ஒரு செய்தியைத் தெரிவிக்க விழைகின்றேன்.
கண்ணியமிகு காயிதேமில்லத் அவர்களை விட உங்களுக்குப் பெரிய தலைவர் உண்டா? இந்திய பாகிÞதான் பிரிவினையின்போது, பாகிÞதான் முÞலிம் லீக் கட்சியினர், தங்களிடம் இருந்த கோடிக்கணக்கான பணத்தை உங்களுக்கும் பங்கு வைத்துத் தருகிறோம் என்று சொன்னபோது, பாகிÞதானிடம் இருந்து சல்லிக்காசு வாங்க மாட்டோம் என்று சொன்னவர் காயிதேமில்லத். சீனம் படையெடுத்தபோது, என் மகனைப் போர்முனைக்கு அனுப்பி வைக்கிறேன் என்று பண்டித நேருவுக்குக் கடிதம் எழுதியவர் காயிதேமில்லத். ரயில் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு ஜட்கா வண்டியில்தான் பயணித்தார். பசும்பொன் தேவர் திருமகனைப் போல, கேரள மாநிலத்தில் தாம் போட்டியிட்ட மஞ்சேரி தொகுதியில் வாக்குக் கேட்டுப் போகாமலேயே வெற்றி பெற்றவர்.
நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் ஜே.எம். சாலி, காயிதேமில்லத் அவர்களை நேர்காணல் கண்டு கண்ணியமிகு காயிதேமில்லத் என்று ஒரு புத்தகம் எழுதி இருக்கின்றார். நான் வேறு யாரைப் பற்றியாவது சொன்னால், உடனே அவர்களை அழைத்து மறுப்பு அறிக்கை விட வைப்பார் கலைஞர். நீதான் இந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்று மறைந்த தலைவர்கள் தன்னிடம் சொன்னதாக அடித்து விடுவார். யாருக்குத் தெரியும்? அல்லது இறந்து போன தலைவர்கள் எழுந்து வந்து மறுக்கப் போகின்றார்களா? என் மக்களை நீதான் காப்பாற்ற வேண்டும் என்று காயிதேமில்லத் சொன்னதாகச் சொல்லுவார். காயிதேமில்லத் இப்போது வந்து மறுக்கப் போகின்றாரா?
கண்ணியமிகு காயிதேமில்லத் என்ற புத்தகத்தில் 41, 42 ஆம் பக்கங்களில் ஜே.எம்.சாலி, தான் குரோம்பேட்டையில் காயிதே மில்லத் அவர்களைச் சந்தித்து நேர்காணல் கண்டதைப் பற்றி எழுதி இருக்கின்றார். 1967 பொதுத்தேர்தலுக்கு முன்பு குரோம்பேட்டையில் வசித்த காயிதேமில்லத் அவர்களை நானும் சந்தித்து இருக்கின்றேன். சட்டக் கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் சேர்ந்து போய்ப் பார்த்தோம். எழுந்து நின்று எங்களை வரவேற்றார்.அதைப்போலத்தான், காஷ்மீர் சிங்கம் ஷேக் அப்துல்லா அவர்களை, ஸ்ரீ நகரில் அவரது அலுவலகத்திற்குச் சென்று சந்தித்தபோது, அவரது அறைக்குள் நுழைந்தவுடன், ஆறரை அடி உயரமான அந்த மாமனிதர், தமது இருக்கையில் இருந்து எழுந்து வந்து, வா இளைஞனே (ஆல னநயச லடிரபே அயn, உடிஅந டிn) என்று கூறி வரவேற்றார். நான் கொண்டு போயிருந்த காஞ்சிபுரம் பட்டுத் துண்டு, வேட்டியை அவருக்கு அணிவித்தேன். ஒரு மணி நேரம் உரையாடி மகிழ்ந்தேன். அவரது வீட்டுத் தோட்டத்தில் எடுத்த படத்தைத்தான், கலிங்கப்பட்டியில் எனது வீட்டில் மாட்டி வைத்து இருக்கின்றேன். தந்தை பெரியாரும் அப்படித்தான். மூத்திரப் பையைச் சுமந்துகொண்டு இருந்த நிலையிலும், இளைஞர்கள் வந்தாலும் எழுந்து நின்று, ஐயா வாங்க என்று கூறி வரவேற்பார். இந்தத் தலைவர்களிடம் இருந்து அந்தப் பண்பாட்டை நான் கற்றுக் கொண்டேன். எனக்குச் சாதி வேறுபாடு கிடையாது. கூலி வேலை பார்ப்பவர்கள் என்னைச் சந்திக்க வந்தாலும் எழுந்து நின்று வரவேற்கிறேன்.
காயிதேமில்லத் அவர்கள் தமது நேர்காணலில் என்ன சொல்லுகிறார்? கடந்த ஆண்டு, 1965 ஆம் ஆண்டு மேற்கொண்ட தீர்மானத்தின்படி, இந்திய யூனியன் முÞலிம் லீக் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்தோடும், சுதந்திரா கட்சியோடும் கூட்டணி வைத்து இருக்கின்றோம். அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில், குறைந்த பட்ச செயல்திட்டத்தில், எந்தக் கட்சியோடும் நாங்கள் கூட்டணி அமைப்போம் என்கிறார். செய்தியாளர்கள் கவனிக்க வேண்டும். குறிப்பாகக் கேரளத்துச் செய்தியாளர்கள் கவனிக்க வேண்டும்.
இப்போது சாலி கேட்கிறார். அப்படியானால் எந்தக் கட்சியோடும் கூட்டணி வைப்பீர்களா? உடனே காயிதேமில்லத் சொல்லுகிறார். ஆமாம். நாங்கள் ஜனசங்கத்தோடும் கூட்டணி அமைப்போம்.
இதற்கு என்ன சொல்லப் போகிறது மனிதநேய மக்கள் கட்சி? இதற்கு என்ன சொல்லப் போகிறது இந்திய யூனியன் முÞலிம் லீக்? எங்களைப் பார்த்து மதவாதக் கட்சியோடு கூட்டுச் சேர்ந்து விட்டார் என்று கடுமையாகத் தாக்கி வருகின்றார்கள். பரவாயில்லை. அவர்கள் பேசிவிட்டுப் போகட்டும்.
காயிதேமில்லத் ஜனசங்கத்தோடும் கூட்டணி வைப்போம்; கம்யூனிÞடுகளுக்கும் இது பொருந்தும். அதற்காக நாங்கள் கொள்கையை விட்டுவிட்டோம் என்று அர்த்தம் அல்ல. எல்லாக் கட்சிகளும் எப்போதுமே எதிரும் புதிருமாக இருக்க வேண்டும் என்பது அவசியம் அல்ல. குறைந்தபட்ச செயல்திட்டத்திற்கு யார் உடன்பட்டு வருகின்றார்களோ, ஒருவர் உரிமையை மற்றொருவர் அங்கீகரிக்கின்றார்களோ, அவர்களோடு கூட்டு வைத்துக் கொள்ள நாங்கள் தயார்; அப்படி ஜனசங்கத்தோடும் கூட்டு வைக்கத் தயார் என்று அவர் சொன்னதை, அன்றைக்கு அமெரிக்கப் பத்திரிகைகள் கூட வெளியிட்டு இருக்கின்றன. இந்தியாவில்தான் அதைப்பற்றிச் செய்தி போடவில்லை என்றார் காயிதேமில்லத். இதற்கு என்ன சொல்லப் போகின்றீர்கள்?
எங்கள் நிலையை நான் தெளிவுபடுத்தி விடுகிறேன். பொது சிவில் சட்டம் என்ற கருத்தை நாங்கள் ஏற்கவில்லை. எதிர்க்கின்றோம். அரசியல் சட்டத்தின் 370 ஆவது பிரிவை நீக்க வேண்டும் என்பதையும் நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதில் எந்தக் குழப்பமும் இல்லை; மறுபேச்சுக்கும் இடம் இல்லை.
வாஜ்பாய் காலத்திலேயே இதை நாங்கள் தெளிவுபடுத்தி இருக்கின்றோம். அன்றைக்கு வாஜ்பாய் அரசு வகுத்த குறைந்தபட்ச செயல்திட்டத்தில், மேற்கண்ட கருத்துகள் இடம் பெறவில்லை. ஆனால் அது பாரதிய ஜனதா கட்சியின் கொள்கை. அதுபோல, சுதந்திரத் தமிழ் ஈழம் என்பது எங்கள் கொள்கை. அதை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற தேவை கிடையாது.
இÞலாமியர்களின் தோழன் யார்?
பொது சிவில் சட்டம் என்ற தனிநபர் மசோதாவை பாரதிய ஜனதா கட்சி பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தபோது அறிமுக நிலையிலேயே நானும், பனத்வாலாவும் எதிர்த்தோம். இது கூடாது என்று தடுத்தோம். பிரமோத் மகாஜன் என்னிடம் வந்தார். மம்தா பானர்ஜி வெளியே போய்விட்டார். அதைப்போல நீங்களும் வெளியே சென்று விடுங்கள் என்று கேட்டுக் கொண்டார். இல்லை மகாஜன், நாங்கள் எதிர்த்துப் பேசி வாக்கு அளிப்போம் என்று சொன்னோம். எதிர்த்து வாக்கு அளித்தோம். பனத்வாலா கட்டிப் பிடித்துக் கொண்டு நன்றி தெரிவித்தார். அதுமட்டும் அல்ல, நம்முடைய கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களிடம் முÞலிம்களின் உண்மையான நண்பன் வைகோதான் என்று சொன்னார். அதை நான் தமிழருவி மணியன் அவர்களோடு சேர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பேசிவிட்டு, இன்றைக்கு இரவே கவிக்கோவைக் கலைஞர் தொடர்பு கொண்டு இதை மறுத்து அறிக்கை விடச்சொல்லுவார் என்று சொன்னேன்.
அதேபோல அன்று இரவு 11 மணிக்கே அவரைத் தொடர்பு கொண்டு கேட்டார்கள். பனத்வாலா அப்படிச் சொன்னாரா? என்றுகேட்டடார்கள். ஆமாம் சொன்னார் என்றார் கவிக்கோ. அவர் அப்படிச் சொல்லவில்லை என்று நீங்கள் ஒரு மறுப்பு அறிக்கை வெளியிட வேண்டும் என்று, தலைவர் விரும்புகிறார் என்றார்கள். அவர் ஒன்றும் சொல்லவில்லை. தமிழகத்தின் கலீல் கிப்ரான் அப்துல் ரகுமான் என்று கருதுபவன் நான். அவர் மறுத்து அறிக்கை விட்டு இருந்தாலும் அதற்காக அவர் மீது எனக்கு வருத்தம் வராது. மறுநாள் காலை ஆறு மணிக்கு மீண்டும் தொடர்பு கொண்டு கேட்டார்கள். அப்போதும் அவர் அறிக்கை விடவில்லை.
யார் இÞலாமியர்களின் தோழன்? பொதுசிவில் சட்டத்தை ஆதரித்து, தி.மு.க. வாக்கு அளித்ததே, அவர்கள்தான் உங்கள் நண்பர்களா? பதில் சொல்ல வேண்டும், ஹைதர் அலி, ஜவாஹிருல்லா. அவர்களை நான் மிகவும் மதிக்கிறேன். இராணுவத்தில் பணி ஆற்றுகின்ற இÞலாமியச் சகோதரர்கள் தொழுகைக்கு அனுமதி வேண்டும் என்று, வாஜ்பாயிடம் சொல்லி அனுமதி பெற்றுத் தந்தவன் வைகோ.
உளறல் மன்னன் ராகுல் காந்தி
சோனியா காந்தி ஏற்பாட்டில் ஆயுதங்களைக் கொடுத்து, இலட்சக்கணக்கான எங்கள் தொப்புள் கொடி உறவுகளைப் படுகொலை செய்தார்களே, தமிழ் இனப் படுகொலையின் கூட்டுக் குற்றவாளி சோனியா காந்தி. அந்த காங்கிரÞ அரசை அகற்றுவதற்காக நாங்கள் இந்தக் கூட்டணியில் சேர்ந்து இருக்கின்றோம். இந்தியாவிலேயே மிகப்பெரிய உளறல் மன்னனாக உலவுகிறார் ஒருவர். உளறிக்கொட்டுகிறார் ராகுல் காந்தி. அடுத்து நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு தருவோம் என்று பேசி இருக்கின்றார். கடந்த பத்து ஆண்டுகளாக நீங்கள்தானே ஆட்சியில் இருந்தீர்கள். அப்போது ஏன் செய்யவில்லை? அல்லது நீங்கள் கோமாவில் நினைவு இழந்து கிடந்தீர்களா?
இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேல் முறையீடு செய்தால், அந்தக் கட்டத்தில் அவர்களைப் பாதுகாக்கின்ற வகையில் மன்மோகன்சிங் அவசரச் சட்டம் கொண்டு வந்தார். திடீரென ஒருநாள் முண்டா தட்டிக்கொண்டு பிரÞ கிளப்புக்குள் வந்தார் ராகுல் காந்தி. செய்தியாளர்களைச் சந்தித்தார். இது முட்டாள்தனமான சட்டம் என்றார். பிரதமரைப் பார்த்து முட்டாள் என்று செய்தியாளர்களிடம் சொல்கிறார். மன்மோகன்சிங் அரசியல் தவறாக இருக்கலாம். உலகத்தின் மிகச்சிறந்த பொருளாதார மேதைகளுள் ஒருவர். நேர்மையானவர். ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்தபோது, வங்கிக் காரில் பயணிக்காமல், பேருந்தில்தான் வீட்டுக்குச் செல்வார்.
நான் பொருளாதாரத்தில் தங்கப் பதக்கம் பெற்றவன். உலகப்புகழ் பெற்ற பொருளாதார மேதை லண்டன் லார்ட்Þகியின் மாணவரான பேராசிரியர் வேலாயுதம் அவர்களிடம் பாடம் கற்றவன். அவர் அண்ணாவின் வகுப்பறைத் தோழர். பக்கத்துப் பக்கத்து இருக்கையில் அமர்ந்து படித்தவர்கள். அவருடன் இருந்த ஒருவர் என்னைச் சந்தித்தார். டாக்டர் மன்மோகன்சிங் மிகச்சிறந்த பொருளாதார மேதை என்று சொன்னார்.
அப்பேர்ப்பட்டவரை, இந்தியாவின் பிரதமரைப் பார்த்து, ராகுல் காந்தி சொல்லுகிறார் முட்டாள் என்று. மதுரைக்காரர்கள் பாஷையில் சொல்வது என்றால், அவன் கிடக்கிறான் சின்னப்பயல் விட்டு விடுங்கள் என்பார்கள். நம்முடைய சின்னசெல்லம் அப்படித்தான் சொல்லுவார். அண்ணாச்சி அவனைப் பற்றியெல்லாம் பேசாதீர்கள் என்பார். மன்மோகன் சிங் கொண்டு வந்த சட்டத்தைக் கிழித்துக் குப்பைத்தொட்டியில் போட வே 

No comments:

Post a Comment