தமிழ் சிங்கள ஜயவருட மலரும் சித்திரை புத்தாண்டு எம்மவர் எல்லோருக்கும் சகல சௌ பாக்கியங்களையும் வழங்கும் ஒன்றாக அமைய வேண்டும் என பிராத்திப்பதாக வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் விடுத்துள்ள வாழ்த்து செய்தியினில் தெரிவித்துள்ளார்.
இதில் மேலும் தெரியவருகையினில் வடக்கு மாகாணசபையை பொறுத்தவரை இது எமது முதலாவது சித்திரை புத்தாண்டு ஆகும் நீண்ட கால போர் சூழ்நிலையில் இடப்பெயர்வுகள்,பொருளாதார தடைகள் என எண்ணில்லா இன்னல்களை சந்தித்த எமது மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் மாகாண சபை தேர்தலில் வாக்களித்தனர் .வட மாகாணத்தில் என்னும் இடம் பெயர்ந்து முகாம்களிலும் உறவினர்களது வீடுகளிலும்,வாடகை வீடுகளிலும் வாழும் எம்மக்கள் தமது சொந்த இருப்பிடங்களுக்கு திரும்பி தமக்கு பரீட்சயமான தொழில்களை செய்து தமது வாழ்வாதாரத்தை தாமே தேடிக்கொள்ளக்கூடிய நிலைமை ஏற்படவேண்டும்.
கட்டுப்பாடுகள் எதுவுமின்றி கடற்றொழில்,விவசாயம் ,கைத்தொழில்கள் செய்யக்கூடிய சூழ்நிலை உருவாகவேண்டும் .எட்டாக்கனியாக காணப்பட்டு வந்த அரசியல் தீர்வு சர்வதேச நாடுகளின் ஊக்குவிப்புகளுடனும் ஒத்துளைபுடனும் தமிழ் தேசிய இனத்தின் தாயகம்,தேசியம்,தன்னாட்சி,சுய நிர்ணயம் என்ற கோட்பாடுகளின் அடிப்படையில் ஐக்கிய இலங்கைக்குள் எமது அரசியல் உரிமைகளையும் அதிகார பகிர்வையும் பெற்றுக்கொள்ளக்கூடிய ஆண்டாக இந்த சித்திரை புத்தாண்டு அமையவேண்டும் என பிராத்திப்பதுடன் எமது மண்ணிலும் பிறநாடுகளிலும் வாழும் புலம் பெயர் உறவுகளுக்கும் எமது சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதுடன் இந்த ஐய வருடம் எல்லோருக்கும் வெற்றி தரும் வருடமாகவும் இருக்க பிரார்த்திக்கின்றோம் என்றுள்ளது

No comments:
Post a Comment