யாழ்ப்பாணத்தின் வடமாராட்சியின் முன்னணி சுதந்திர ஊடகவியலாளரான சிவஞானம் செல்வதீபன் (வயது 29) மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வல்லை புறாப்பொறுக்கிச் சந்திக்கு அருகில்
பருத்தித்துறை சென்று கொண்டு இருந்த இவரின் பின்னால் சென்ற இனம்தெரியாதோர் நீ ஊடகவியலாளரா? ஏன கேள்வி எழுப்பியதோடு தலையில் பலமாக கூரிய ஆயுதங்களினால் தாக்கியும் உள்ளனர். தாக்குதலில் தப்பி ஓட முற்பட்ட செல்வதீபன் மீது கலைத்துச் சென்ற இனம் தெரியாதோர் மேலும் தாக்கியபோது கால் முறிவடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
தமது மோட்டார் சைக்கிளில் விளக்குகளை அணைத்துவிட்டு அவரை பின் தொடர்ந்த நபர்களே தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்கள் ஏற்கனவே தன்னை அடையாளம் கண்டிருக்கலாமென செல்வதீபன் தெரிவிக்கின்றார். தான் தன்னை வெளிப்படுத்த முன்பதாக தாக்குதல் நடந்ததாகவும் சுதாகரித்துக்கொண்டு ஆட்கள் அற்ற அப்பகுதியினிலுள்ள பற்றைகளினுடாக தப்பி செல்ல முற்பட்ட போதும் அவர்கள் துரத்தி துரத்தி கொலை செய்யும் பாணியினில் தாக்கியுள்ளனர். தினக்குரல் வலம்புரி மற்றும் வீரகேசரி பத்திரிகைகளிற்காக அவர் பணியாற்றியிருந்தார்.
இராணுவக்குவிப்பு மற்றும் கடந்த ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட மாவீரர் தின நிகழ்வுகளை அறிக்கையிட்டமையென பல செய்திகளை வெளிக்கொணர்ந்த செல்வதீபன் உயிருக்கு தொடர்ச்சியாக விடுக்கப்பட்டுவந்த அச்சுறுத்தலையடுத்து நாட்டைவிட்டு வெளியேற முற்பட்டிருந்தனர். அவ்வாறு அடைக்கலம் கோர அவர் விண்ணப்பித்த சுவிஸ் அரசு நிராகரித்திருந்ததுடன் அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏதுமில்லையென தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
.

No comments:
Post a Comment