யேர்மனி நொய்ஸ் நகரில் அன்னை பூபதியின் 26ம் ஆண்டு நினைவு நிகழ்வு
சிறப்புடன் நடைபெற்றது. பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட நிகழ்வில்
பொதுச்சுடரை விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் திரு.குமரன் ஏற்றிவைக்க,
தமிழீழத் தேசியக்கொடியை முன்சன்கிளட்பாக் நகரச்செயற்பாட்டாளர்
திரு.சக்திவேல் அவர்கள் ஏற்றிவைத்தார். ஈகைச்சுடரை பாரதி கலைக்கூடப்
பொறுப்பாளர் திரு.கோபி அவர்கள் ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து அன்னை பூபதியின்
திருவுருவப்படத்திற்கு மலர்மாலையை லெவர்கூசன் நகரச் செயற்பாட்டாளர்
திரு.ஞானேந்திரன் அவர்கள் அணிவித்தார்.
ஆரம்ப நிகழ்வாக செல்வி ஈழவாணியின் சிறப்பான தமிழிசை இடம்பெற்றது. தொடர்ந்து செந்தளிர் இசைக்குழுவின் இசைவணக்கம் இடம்பெற்றது. நிகழ்வினில் திரு ஞானசம்பந்தரின் ஆக்கத்தில் இளையோர்களின் கவியரங்கமும் தொடர்ந்து தமிழ்க் கல்விக் கழகச் செயற்பாட்டாளர் திருமதி.ஜெயமதி இராசேந்திரம் அவர்களின் சிறப்புரை இடம்பெற்றது.
நிகழ்வினில் சிறப்பம்சமாக கலைபண்பாட்டுக் கழக ஆசிரியைகளினால் நெறிப்படுத்தப்பட்டு 71 மாணவர்கள் கலந்துகொண்ட || வெல்வது உறுதி || என்ற நாட்டிய நாடகம் மிக உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. பின்பு தேசியக்கொடி இறக்கி வைக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் பாடல் ஒலிக்க நிகழ்வு நிறைவடைந்தது.

No comments:
Post a Comment