September 2, 2016

யாழ்.கச்சேரி முன் ஆளுநர் அலுவலக வாசலில் காத்திருக்கும் மக்கள்!! ஓட்டம் எடுத்த பான் கீ மூன்!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் யாழ்ப்பாணம் வந்திருக்கும் நிலையில் நீதி வழங்கத் தவறிய ஐ.நாவின் செயற்பாடுகளைக் கண்டித்து, காணமல் போன உறவுகளை மீட்டுத் தரக் கோரியும், ஆக்கிரமிப்பு இடங்களை விடுவிக்கக் கோரியும் மக்கள் பான் கீ மூனுக்கு தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பாணம் ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக காத்திருந்தனர் மக்கள்.

யாழில் ஈபிடிபி அட்டகாசம்!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் யாழ் பொது நூலகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்திக்க வருகை தந்திருந்த போது காணாமல் போனவர்களின் உறவுகள், மற்றும் நில ஆக்கிரமிப்பில் பாதிக்கப்பட்டோர்,

மலேசியாவில் மஹிந்த ராஜபக்ஷயின் உருவ பொம்மை எரிப்பு??

மஹிந்த ராஜபக்ஷ மலேசிய வந்துள்ளதையும் அவர் மலேசிய உலக மாநாட்டு மைய மண்டபத்தில் இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளமையை தொடர்ந்து மலேசிய தமிழர்கள் கடும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பான் கீ மூனை சந்தித்தார் அமைச்சர் றிசாத் பதியூதின்; மகஜர் ஒன்றும் கையளிப்பு!

ஸ்ரீலங்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று காலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கொடுக்குளாய் – இயக்கச்சி இணைப்பு வீதி நாளை திறப்பு!

கொடுக்குளாய் – இயக்கச்சி இணைப்புப்பாதை திறப்பு விழா நாளை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இன்று மதியம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்கின்ற நிலையில், யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.

போலிக் கடவுச்சீட்டுடன் விடுதலைப் புலி முன்னாள் உறுப்பினர் இந்தியாவில் கைது!

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான இலங்கை பிரஜையொருவர் புனே சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியாவைச் சேர்ந்த கணவன் மனைவிக்கு தமிழகத்தில் நடக்கும் கொடுமை!!

வவுனியாவைச் சேர்ந்த கணவன் மனைவிக்கு தமிழகத்தில் நடக்கும் கொடுமை!! வவுனியா அருகே உள்ள மகரம்மை குளத்தை சேர்ந்தவர் சுஷ்யந்த் (வயது23). விவசாயி. இவருடைய மனைவி துவாரகா(22). இவர்களது மகள் சகிதா(1). துவாரகா தற்போது கர்ப்பிணியாக உள்ளார்.

வாயில் ஒட்டிய பிளாஸ்டரை கழற்றிய போது சுலைமானின் நாக்கு தொங்கியது!! கொலையில் திடுக்கிடும் ஆதாரம்…!

வர்த்தகர் முஹம்மட் சகீப் சுலைமானின் காதுப்பகுதியில் இரும்புக் கம்பியால் தாக்கி, கைகளையும் கால்களையும் கட்டிவிட்டு, வாயில் பிளாஸ்டர் ஒன்றையும் ஒட்டியுள்ள கடத்தல்காரர்கள்,

மீண்டும் சிறை யில் பிள்ளையான்…!

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) பிணை மனுவை மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி வி.சந்திரமணி நிராகரித்துள்ளார்.

தமிழ் மக்களைக் காப்பாற்ற ஐ.நா தவறி விட்டது: ஒப்புக்கொண்டார் பான் கீ மூன்!

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான பிரதிநிதிகள் முறையாக செயற்பட்டிருந்தால் அதிகமான மனித உயிர்களை யுத்த களத்தில் பாதுகாத்திருக்க முடியும் என ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் தெரித்திருந்தார்.

காலி கடற்கரையில் ஐ. நா செயலாளர் மனைவியுடன் செல்பி!

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். இந்நிலையில் அவர் நேற்றையதினம் காலிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

ஐ.நா பொதுச்செயலர் இன்று யாழ்.வருகிறார்! - மூன்று இடங்களில் கவனயீர்ப்பு போராட்டங்கள்!

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீ மூன் இன்று யாழ்ப்பாணம் செல்லவுள்ளார். இதன்போது, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

மன்னார் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை பற்றி எழுதப்பட்ட ‘ஓர் வாழும் நாயகன்’ நூல் வெளியீடு!

மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பணி மையம் ‘கலையருவி’ அமைப்பின் இயக்குனர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளாரின் ஏற்பாட்டில் மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் பற்றிய ஆங்கில நூல் ஒன்று இன்று வியாழக்கிழமை (01.09.2016) மாலை மன்னார் குடும்ப நல பொது நிலையினர் பணியக மண்டபத்தில் வைபவ ரீதியாக வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

யாழ். பொது நூலகம் முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டம்!

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு  இலங்கை வருகை தந்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி  தீரமானித்துள்ளது.

இலங்கை தமிழ் புகலிட கோரிக்கையாளர் நாடு கடத்தக்கூடாது ; சிட்னியில் ஆர்ப்பாட்டம்!

46 வயதான இலங்கை தமிழ் புகலிட கோரிக்கையாளர் ஒருவரை நாடு கடத்தக்கூடாது என வலியுறுத்தி சிட்னி விலவூட் தடுப்பு முகாமில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களுக்கு ஓர் நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை போராடினார்!

ஒரு போதும் நாடு பிரிந்து போவதை ஆயர் அவர்கள் ஆதரிக்கவில்லை.அவர் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வைத்தான் எதிர் பார்த்தார்.தமிழ் மக்களுக்கு நீதியான ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தனது போராட்டத்தை முன்னெடுத்தார் என மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் தெரிவித்தார்.

மன்னார் அருவியாற்றில் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்படையினர்!

மன்னார் மாவட்டத்தில் உள்ள  நானாட்டன் மற்றும் முசலி பிரதேசங்களை பிரிக்கும்அருவியாற்று பாலத்திற்கு அருகில் உள்ள வெள்ள தடுப்பு மணலை சட்ட விரோதமான முறையில் கடற்படையினர் மற்றும் உள்ளுர் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் சில நபர்களும் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக  பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்கா விண்ணில் செலுத்த இருந்த ஏவுகணை வெடித்தது!

அமெரிக்கா விண்வெளியில் செலுத்த இருந்த ஏவுகணை  புளோரிடாவில் பரீட்சார்த்த  சோதனை மேற்கொள்ளப்பட்ட போது வெடித்து விபத்துக்குள்ளானது.

பயங்கரவாத ஒழிப்பு குறித்த இலங்கையின் நிபுணத்துவம் சர்வதேசத்திற்கு நன்மை அளிக்கும் - அரசாங்கம்!

பயங்கரவாத ஒழிப்பு குறித்த இலங்கையின் நிபுணத்துவம் சர்வதேசத்திற்கு நன்மை அளிக்கும் என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.