September 2, 2016

பயங்கரவாத ஒழிப்பு குறித்த இலங்கையின் நிபுணத்துவம் சர்வதேசத்திற்கு நன்மை அளிக்கும் - அரசாங்கம்!

பயங்கரவாத ஒழிப்பு குறித்த இலங்கையின் நிபுணத்துவம் சர்வதேசத்திற்கு நன்மை அளிக்கும் என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தை தோற்கடித்தமை குறித்த இலங்கையின் நிபுணத்துவமும் அனுபவங்களும் ஏனைய உலக நாடுகளுக்கு பாரிய அணுகூலமாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


2016ம் ஆண்டு கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக பயங்கரவாத சவால்களை எதிர்நோக்கி வரும் தரப்பினர் இலங்கையின் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


தசாப்தங்களாக பயங்கரவாத ஒழிப்பு குறித்து இலங்கை பெற்றுக்கொண்ட அனுபவங்களை சர்வதேசத்துடன் பகிர்ந்து கொள்வது எவ்வளவு இன்றியமையாதது என்பதனை தற்போதைய அசராங்கம் புரிந்து கொண்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்ட இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment