August 18, 2016

ஆஸியின் மனுஸ்தீவு முகாம் மூடப்படும் - அகதிகளுக்கு நாட்டில் இடமில்லை! அவுஸ்திரேலியா அதிரடி அறிவிப்பு!

அவுஸ்திரேலியாவில் அகதிகளை தடுத்து வைக்கும் மனுஸ்தீவு முகாம் மூடப்படும் எனவும், குறித்த தடுப்பு முகாமில் தங்கியிருக்கும் அகதிகள் யாருக்கும் நாட்டுக்குள் இடமில்லை எனவும் அந்த நாடு அறிவித்துள்ளது.


இலங்கை, ஆப்கானிஸ்தான், சிரியா, ஈரான் மற்றும் ஈராக்கைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தங்கவைக்கும் முகாமில் மனுஸ்தீவு தடுப்பு முகாமும் ஒன்று. இந்த முகாம் பப்புவா நியூகினி தீவுகளில் உள்ளது.

இந்த முகாமை மூடுவது தொடர்பாக அவுஸ்திரேலியா அமைச்சர் பீட்டர் டட்டனுக்கும் பப்புவா நியூகினியின் அமைச்சர் பீட்டர் ஓ நீல்-க்கும் இடையே பேச்சுவார்த்தை ஒன்று நடைப்பெற்றுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, மனுஸ்தீவு முகாம் மூடப்படும் என்றும், இந்த முகாமில் இருக்கும் யாரும் அவுஸ்திரேலியாவில் குடியமர்த்தப்படமாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

குறித்த மனுஸ்தீவு முகாமில் தற்போது 854 பேர் அகதிகளாக உள்ளனர்.
மேலும், கடந்த 2 ஆண்டுகாலமாக அவுஸ்திரேலியாவுக்குள் வர முயன்ற அகதிகளின் படகுகள் எதுவும் அந்த நாட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment