நான்காம் கட்ட ஈழப்போரின் முடிவில் ஏதிலிகளான தமிழ்மக்கள் அடைத்து வைக்கப்பட்ட மெனிக்பாம் என்ற வவுனியா
வெங்கல செட்டிகுள பிரதேச செயலர் பிரிவிலுள்ள காணிகளை சிறீலங்கா இராணுவத்திடம் வழங்குமாறு காணி ஆணையாளர் பிரதேச செயலாளருக்கு அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியுள்ளார். இந்த காணிகளின் மொத்த பரப்பளவு 6,348 ஏக்கர்களாகும். தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த இந்த பகுதியிலிருந்து. 1990களில் தமிழ் மக்கள் விரட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வவுனியாவில் சிங்கள குடியேற்றங்கள் மின்னல் வேகத்தில் நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. வவுனியாவின் எல்லையோர தமிழ் கிராமமான கொக்கச்சான் குளம் முழுமையாக சிங்கள மயப்படுத்தப்பட்டு கலா போகஸ்வெவ என்ற பெயராக்கப்பட்டுள்ளது. அங்கு 3,500 சிங்கள குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளன. இதேபோல, வவுனியாவின் எல்லையோரங்கள் வேகமாக அரிக்கப்பட்டு வருகின்றன. இந்த விடயத்தில் தமிழ் அரசியல்வாதிகள் மௌனம் சாதிப்பது, விரைவில் வவுனியாவும் பறிபோய்விடலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment