July 2, 2016

தனது வலது கையை அறுத்தெறிந்தார் அங்கஜன் MP!! நடந்தது என்ன?

தனது வலது கையை அறுத்தெறிந்தார் யாழ் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்!! நடந்தது என்ன? யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான அங்கஜன் இராமநாதன் தனது வலதுகையை அறுத்தெறிந்துள்ளார்.


கடந்த காலங்களில் அங்கஜன் இராமநாதனின் வலதுகரமாக இருந்து தேர்தல் காலங்களில் பலவகையான அதிரடிகளைச் செய்து வந்த பாலா என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆயர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

யாழ் பொலிஸ்நிலையத்திற்கு அருகில் உள்ள அங்கஜனுக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து 19 இலட்சம் ரூபா காசை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே பாலா கைது செய்யப்பட்டுள்ளார்.


No comments:

Post a Comment