முல்லைத்தீவு விவசாயத் திணைக்களத்தில் பணி புரியும்ப சிரேஷ்ட பெண் முகாமைத்துவ உத்தியோகத்தர் ஒருவரின் துன்புறுத்தல் காரணமாக பட்டதாரிப் பயிலுனர் ஒருவர் தனது பதவியை இராஜினாமா செய்வதாக இராஜினாமா கடிதத்தை மாகாண விவசாய திணைக்கள பணிப்பாளருக்கு கடிதம் கையளித்துள்ளார்.
குறித்த பெண் பட்டதாரிப் பயிலுனர் யாழ்ப்பாணத்திலிருந்து கடந்த ஜனவரி மாதம் பட்டதாரிப் பயிலுனராக நியமனம் செய்யப்பட்டு முல்லைத்தீவு விவசாயத் திணைக்கத்திற்குப் பணிக்குச் சென்றுள்ளார். ஆறு மாதங்கள் கடந்த நிலையில் இவர் தனது பதவியை இராஜினாமா செய்வதாக மாகாண விவசாய திணைக்கள பணிப்பாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில் குறித்த பட்டதாரிப் பயிலுனர் எதற்காக இராஜினாமா செய்கின்றார் என்பது தொடர்பில் மாகாண விவசாய பணிப்பாளர் அலுவலக அதிகாரிகள் நேற்று முந்தினம் அவரை விசாரணை செய்துள்ளனர். இதன்போது, முல்லைத்தீவு விவசாயத் திணைக்களத்தில் பணி புரியும் சிரேஷ்ட அதிகாரி ஒருவரது துன்புறுத்தல் காரணமாகவே தான் பணியிலிருந்து விலகுவதாக அப் பட்டதாரிப் பயிலுனர் விசாரணையில் அதிகாரிகளுக்கு கூறியுள்ளார்.
இயல்பாக தன்னை பணியாற்ற விடாது தொந்தரவுகளை ஏற்படுத்துவதுடன், கடுமையான வார்த்தைப் பிரயோகங்களின் ஊடாக தினமும் குறித்த சிரேஷ்ட முகாமைத்துவ உத்தியோகத்தர் துன்புறுத்துவது தன்னை உளவியல் ரீதியாக பாதித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனது தாயார் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் கடும் மன அழுத்தங்களின் மத்தியில், பத்தாயிரம் ரூபா சம்பளத்திற்காக முல்லைத்தீவுக்கு வந்து தங்கி பணி புரியும் தன்னை குறித்த அதிகாரி மேலும் மேலும் உளவியல் ரீதியான அழுத்த்திற்கு ஆளாக்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் குறித்த பணியை துறந்து புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட தாயினை கவனிக்க தீர்மானித்துள்ளதாகவும் அப் பட்டதாரி பயிலுனர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் முல்லைத்தீவு விவசாயத் திணைக்களத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிப் பயிலுனர்கள், குறித்த உத்தியோகத்தரின் செயற்பாடுகள் காரணமாக, அங்கு பணியாற்ற மறுத்து, வேறு திணைக்களங்களுக்கு இடமாறிச் சென்ற சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன என்றும் மாகாண விவசாய திணைக்கள வட்டாரங்ககளில் இருந்து அறிய முடிகிறது.

No comments:
Post a Comment