ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களை அமுல்படுத்தும் இலங்கை அரசாங்கத்தின் முனைப்புக்களில் திருப்தியில்லை என ஆய்வு தகவலொன்று சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பை மையமாகக் கொண்டு இயங்கி வரும் Verité Research என்ற நிறுவனத்தினால் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு அளித்த வாக்குறுதிகளில் பல இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்துள்ளது.
இடைக்கால நீதி, நல்லிணக்கம், உரிமைகள், சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் இராணுவ மயாக்கல்களை அகற்றுதல், அதிகாரப் பகிர்வு, சர்வதேசத்தின் பங்களிப்பு உள்ளிட்ட 36 விடயங்களில் நான்கு விடயங்களே முழுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஏனைய பரிந்துரைகளை அமுல்படுத்துவதில் இலங்கையின் முனைப்பு போதுமானதல்ல என சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச நீதவான்களை விசாரணைகளில் பங்கேற்கச் செய்தவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ளார் எனவும் இது அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment