July 2, 2016

இலங்கை அரசாங்கம் சர்வதேச நீதிமன்றத்துக்கு ஒருபோதும் அச்சம் கொள்ளவில்லை ; சமரவீர!

இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரால் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்கான நீதிமன்ற பொறிமுறையொன்றை அமைப்பது குறித்த  இறுதித் தீர்மானம், சகல அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடிய பின்னரே எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனீவாவில் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் சர்வதேச நீதிமன்றத்துக்கு ஒருபோதும் அச்சம் கொள்ளவில்லையெனவும் சர்வதேச உதவியுடன் தேசிய நீதிமன்றமொன்றை உருவாக்குவதுதான் இலகுவானது எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment